பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 0ஆரணிய காண்ட ஆய்வு

புண்டரிகம் - தாமரை. வாள் = ஒளி. நயனம்= கண், குண்டிகை = சிறு குடம்- கமண்டலம்,

இராமனைக் கண்டதும் அகத்தியனின் கண்கள் நீர் பொழிந்தனவாம். அகத்தியன் கண்ணிர் விடவில்லையாம் அவன் கண்கள் நீர் பொழிந்தனவாம். இது ஒரு சுவைக் கருத்து.

'பொழிய, (பொழிதல்) என்பது கண் என்னும் சினையின் (உறுப்பின்) வினை. அது, நின்றான்' என்னும் வினை முதலின் (அகத்தியனின்) வினையைக் கொண்டு முடிந்தது.

'அவற்றுள்,

அம் முக் கிளவியும் சினைவினை தோன்றின் சினையொடு முடியா முதலொடு முடியினும் வினை ஒரனைய என்மனார் புலவர்” (2:6:32) என்னும் தொல்காப்பிய நூற்பாவின்படியும்,

'முதலில் நான்கும் ஈற்றில் மூன்றும்

வினைமுதல் கொள்ளும் பிறவும் ஏற்கும்பிற” (2:2:25) 'சினைவினை சினையொடு முதலொடும் செறியும்’

(2:2:26) என்னும் நன்னூல் நூற்பாக்களின் படியும். கண்கள் அழுததாகச் சொல்லினும் அகத்தியன் அழுதான் என்பதே கருத்து. * மகிழ்ச்சிக் கண்ணிரைப் பற்றி முன்பே ஓரிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. இஃதும் அஃதே மகிழ்ச்சி என்னும் மன எழுச்சி தோன்றக் அழுதான். இராமன் அரசை இழந்து வந்துள்ளானே என்ற இழப்பு காரணமாக வந்த அழுகை இது என்று கூறல் பொருந்தாது. *

. அகத்தியன் காவிரி கொணர்ந்தவன் எனச் சிறப்பிக்கப் பெற்றுள்ளான். இந்தியாவில் கர்நாடக மாநிலத்திற்கு மட்டும் காவிரி உரியதாகச் சொல்லப்படவில்லை. எண்