பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ) ஆரணிய காண்ட ஆய்வு

மக்கட்கு அமிழ்தமாகியனவாகிய நிழலைத் தருவதாம்.

மன்னர்கள் குடை வைத்திருப்பது, வெயிலால் வருந்துபவரைக் காக்கும் குடைபோல, வறுமையாலும் மற்ற துன்பங்களாலும் வருந்தும் மக்களைக் காப்போம் என்று உறுதி கூறுவதின் அடையாளமாகும். ஈண்டு, கிள்ளி வளவனை வெள்ளைக்குடி

நாகனார் பாடிய புறநானூற்றுப் பாடலில் உள்ள

"கண்பொர விளங்குகின் விண்பொரு வியன்குடை

வெயில் மறைக் கொண்டன்றோ அன்றே வருந்திய குடி மறைப் பதுவே (35 : 19,20,21) என்னும் பகுதியும், சிலப்பதிகாரத்தில் உள்ள

"திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

கொங்கலர் தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் அங்கண் உலகு அளித்தலான்’ (1 : 1, 2, 3) என்னும் பகுதியும், அகநானூற்றில் உள்ள

"உலகுடன் கிழற்றிய தொலையா வெண்குடைக்

கடல்போல் தானைக் கலிமா வழுதி” (204 1, 2)

என்னும் பகுதியும், பெருங்கதையில் உள்ள

“. . . . . . . . . ஏம வெண்குடை” (1,36: 104)

"வெயில்அழல் கலியாது வியலக வரைப்பின்

உயிர்அழல் கவிக்கும் உயர்ச்சித் தாகிப் பூந்தார் அணிந்த ஏந்தல் வெண்குடை' (42 : 44.46)

என்னும் பகுதிகளும் ஒப்புநோக்கிச் சுவைக்கத் தக்கன. தமக்கு முன் பாடிய புலவர்களின் கருத்தாட்சியைக் கம்பரும் கையாண்டுள்ளார்.

உயிர் கொடுப்பான் தோழன்

தயரதன் இறந்ததற்குச் சடாயு புதிதாக ஒரு காரணம் கற்பித்துக் கூறியதாகக் கம்பர் பாடியுள்ளார். அதாவது: