பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மாரீசன் வதைப் படலம்

மாய மானாக வந்த மாரீசனை இராமன் கொன்ற தைப்பற்றிக் கூறும் படலம் இது. மாரீசன் இராவணனுக்கு மாமன் முறையினன்.

இராவணனின் திருவோலக்கம்

சூர்ப்பனகை நடந்ததை அண்ணன் இராவணனிடம் கூறவரும்போது இராவணன் அரண்மனையில் அரியணை மீது கொலு வீற்றிருந்த ஆடம்பரமான திருவோலக்கப் பொலிவு பல பாடல்களில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.

மூன்று உ ல க ங் க ைள யு ம் தவ வலிமையால் உடைமையாக்கிக் கொண்ட இராவணன், மங்கையரின் கண்களாகிய வெள்ளத்தின் நடுவே iற்றிருந்தான்.

'இருந்தனன் உலகங்கள் இரண்டும் ஒன்றும் தன் அருந்தவம் உடைமையின் அளவில் ஆற்றலில் பொருந்திய இராவணன் புருவக் கார்முகக் கருந்தடங் கண்ணியர் கண்ணின் வெள்ளத்தே (23)

புருவக் கார்முகம்=புருவ மாகிய வில். கருந் தடங் கண்ணியர் = கரிய பெரிய கண்களை உடைய பெண்கள். பெண்களின் கண்களாகிய வெள்ளத்தின் நடுவே இருந்தான் என்றால், எண்ணற்ற மடந்தையர் அவனைச் சுற்றி நின்று அ வ ன து பொலிவை நோக்கிக் கொண்டிருந்தனர்-என்பதாம்.

காம வெறியால் இறந்த இராவணன், பெண்களின் நாட்டத்தின் நடுவே இருந்தான் என்பதில் வியப்பில்லை.