பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரணிய காண்ட ஆய்வு רח 100

வீக்கிய கனைகழல் வீரன் செங்கணும் தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே”

(36)

என்பது பாடல்.

'கூறியதும் கூறினும் குற்றம் இல்லை

வேறொரு பொருளை விளைக்கு மாயின்’ என்ற முறையில், பழைய செய்தியே இங்கே உவமை களோடு விளக்கப்பட்டுள்ளன. மற்றும், இருவர்க்கும் இது எப்போதும் உள்ள பழக்கம் என்று கூறலாமோ!

பெண்ணின் மார்பைப் பொறுத்துத்தான் பெண்ணின் அழகுக்குச் சிறப்பு. அந்தப் பெண்ணுக்கு மார்பு இல்லை (அதாவது) எடுப்பாக இல்லை) என்று மக்கள் உலகியலில் பேசிக்கொள்வதை யான் கேட்டுள்ளேன். மக்கள் என்ன! திருவள்ளுவரே தெரிவித்துள்ளாரே.

"கல்லாதான் சொல்கா முறுதல் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற் றற்று. (402) இதனால்தான், இதழ்களிலும் திரையோவியங்களிலும் (சினிமாவிலும்) பெண்களின் மார்பை எடுப்பாக அமைத்துக் காண்பிக்கின்றனர். சிற்பங்களிலும் ஒவியங்களிலும் உள்ளதைப் பார்ப்பதுபோல், பெண்களிடத்தும் தவறான நோக்கம் இன்றி இதைக் காணல் வேண்டும். பெண்களே தங்கள் மார்பகத்தைச் செயற்கை முறையில் எடுப்பாக்கி அணி செய்து கொள்வதும் ஈண்டு எண்ணத் தக்கது. குழ்ந்தைகட்குப் பால் கொடுத்து உயிர் காக்கும் உறுப்பைப் பிற பெண்களிடத்தில் தாய்மை உணர்வோடு காணல் வேண்டும். அதற்காகவே அது படைக்கப்பட்டுள்ளது.

ஆடவரின் உருண்டு திரண்ட திண்ணிய தோளுக்கு மதிப்பு மிகுதி. தோள்வலிமையால் வாள்போர் செய்து வெற்றி பெறும் ஆடவர்க்கும் முரட்டுக் காளைகளை