பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 0 263

பின்னர்ச் சிறிது நேரம் எண்ணிப் பார்த்து, அயோமுகி, மோகன மந்திரத்தால் இலக்குவனை மயக்கி வான் வழி யாகத் தூக்கிக்கொண்டு சென்றாள்.

சுந்தரன்

இலக்குவனுடன் வான் வழிச் செல்லும் அயோமுகி, முருகன் ஊர்ந்து செல்லும் மயில்போல் காணப்பட்டாள்.

வெந்திறல் வேல்கொடு சூர் அடும் வீரச்

சுந்தரன் ஊர்தரு தோகையும் ஒத்தாள்” (60)

முருகன் தனது வேல் படையால் சூரனை அழித்தவன். பின் அவனை மயிலாக்கி ஊர்தியாகக் கொண்டான். இங்கே முருகன் போல் இலக்குவன் - மயில் போல் அரக்கி எனக் கொள்ளல் வேண்டும்.

முருகன் சுந்தரன்’ எனப்பட்டான். சுந்தரன் = அழகன். முருகு என்னும் சொல்லுக்கு இளமை - அழகு என்னும் பொருள் உண்டு. எனவே, முருகன் என்னும் சொல்லுக்குப் பதிலாகச் சுந்தரன் என்னும் சொல் அமைந்துள்ளது.

ஈண்டு, திருமுருகாற்றுப் படையின் பிற்சேர்க்கையாக உள்ள

“என்றும் இளையாய் அழகியாய் ஏறுார்ந்தான் ஏறே'

என்னும் பகுதி ஒப்பு நோக்கத்தக்கது.

இராமனது கலக்கம்

தம்பி போனவன் எவ்வளவோ நேரமாகியும் இன்னும் வரவில்லையே. காட்டில் நல்ல தண்ணிர் கிடைக்க வில்லையோ? அல்லது வேறு காரணமோ? விரைந்து செயல் படக் கூடியவனாயிற்றே - வாராமல் இருக்கமாட்டானேஅங்ஙனமிருக்க, ஏன் இன்னும் வரவில்லை என்று இராமன் லக்க முற்றான்: