பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 ロ ஆரணிய காண்ட ஆய்வு

புவியுடை ஒழுக்கம் நோக்காய் பொங்கு

எரிப் புனிதர் ஈயும் அவியை நாய்வேட்ட தென்ன என்

சொனாய் அரக்க என்னா' (69)

சிக்குறச் சேமம் செய்தாள் = மிகவும் கெட்டியாய் மூடிக் கொண்டாள். காகுத்தன் = இராமன். அவி = வேள்வி நெருப்பில் இடும் ஆடு மாடுகளின் நிணம், நெய், பழங்கள் முதலியன. இதற்கு அவி என்பது பெயர். அவி சொரிந்து ஆயிரம் வேட்டல்’ என்னும் குறள் பகுதி ஈண்டு நினைக்கத் தக்கது.

தீக் கடவுள் (அக்கினிதேவன்) இந்த அவியை ஏந்திக் கொண்டு விண் நாடடைந்து தேவர்கட்கு அளிப்பானாம். இத்தகைய உயர்ந்தோர்க்கு உரிய உணவை நாய் விரும்புவது போல, இராமனுக்கு உரியவளை இராவணன் விரும்பினான். தேவர்க்கு இராமனும், அவிக்குச் சீதையும், அரக்கர்க்கு நாயும் ஒப்பாம்.

ஒரு சாரார், குறிப்பிட்ட சிறப்பு நாளில் உண்டு எஞ்சிய எச்சில் இலையை நாயும் தீண்டக் கூடாது என்று தரைக்குள் போட்டுப் புதைத்து மறைத்து விடுவார்களாம்.

இராவணனின் கொடுஞ் சொற்களைக் கேட்டதும் சீதை காதைப் பொத்திக் கொண்டாள் என்பதை அறியும் போது, சிலப்பதிகாரச் செய்தி ஒன்று நினைவிற்கு வருகிறது:

கவுந்தியடிகள் என்னும் பெண் துறவி, கோவலனுடனும் கண்ணகியுடனும் ஒரு சோலையில் தங்கியிருந்த போது, தீயோர் இருவர் வந்து, அடிகளிடம், இவர்கள் யார் எனக் கேட்டனராம். என் மக்கள் என அடிகள் கூறினாராம். உன் பிள்ளைகளாகிய அண்ணனும் தங்கையும் கணவன்