பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் ( 171

'முழவினில் வீணையில் முரல்கல் யாழினில்

தழுவிய குழலினில் சங்கில் தாரையில் எழுகுரல் இன்றியே என்றும் இல்லதோர் அழுகுரல் பிறந்தது அவ்விலங்கைக்கு அன்றரோ” (36) இசை இயங்களில் இன்றியமையாத தோல் கருவி, நரம்புக் கருவி, துளைக்கருவி ஆகியவை குறிப்பிடப் பட்டுள்ளன. மி ட ற் று க் க ரு வி யா ன இனிய இசைப்பாடலுக்குப் பதில் அழுகுரல் எழுந்ததாம்.

அண்ணன் அடியில்

இவ்வாறாக இலங்கைச் சூழ்நிலை துயரத்தில் தோய, இராவணனது அவையில் இருந்தோர் எல்லாம் அஞ்சி ஒட, மலையடியில் முகில் படிந்தது போல் இராவணன் அடிகளில் சூர்ப்பணகை வந்து விழுந்தாள்:

“என்றினைய வன்துயர் இலங்கை நகர் எய்த

கின்றவர் இருந்தவரொடு ஓடும் நெறி தேடக் குன்றினடி வந்துபடி கொண்ட லென மன்னன் பொன்திணி கருங்கழல் விழுந்தனள் புரண்டான்' (45)

கொண்டல்=மேகம். மன்னன் - இராவணன். கருங் கழல் = கழலணிந்த கால். இது இடப்பொருள் (தானி) ஆகுபெயர்.

சூர்ப்பணகை இராவணன் கால்களில் விழுந்ததும் சினங்கொண்ட சூழ்நிலை ஏற்பட்டதால், இராவணன் என்ன செய்வானோ என அஞ்சி, அங்கே நின்றவர்களும் இருந்தவர்களும் அவ்விடத்தை விட்டு ஒடும் வழியைத் தேடி ஓடினர்ர்களாம். அலுவலகத்திலோ, வீடுகளிலோ, தலைவன் பதற்றமாய் இருக்கும் போது மற்றவர்கள் அஞ்சி அடக்கமாயிருப்பது ஈண்டு எண்ணத் தக்கது.

இராவணன் உ ல க மே நடுங்கும்படி மிகவும் கடுமையாகவும் கொடுமையாகவும் சினம்கொண்டு,