பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 ஆரணிய காண்ட ஆய்வு

புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்னும் நான்கு பற்றி வியப்புத் தோன்றலாம் எனத் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் கூறியுள்ளார்:

‘புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு

மதிமை சாலா மருட்கை நான்கே' (7)

என்பது தொல்காப்பிய நூற்பா. மருட்கை = வியப்பு. ஆக்கம் = ஒன்று மற்றொன்றாய் ஆகுதல். இங்கே, சூர்ப்பனகையின் உருவம், நம்ப முடியாத பேரழகுடன் புதுமையாய் இருந்ததாலும், அரக்க உரு மாறி மக்கள் உருவான ஆக்கத்தாலும் இராமனுக்கு வியப்பு தோன்றிற்று. இவளுக்கு ஒப்பானவர் யார் எனச் சீதையை மறந்துவிட்ட நிலையில் இராமன் கூறியுள்ளான். இத்தனைக் கருத்தும், சூர்ப்பணகையின் கோல அழகின் உயரிய எல்லைக் கொடி முடியைப் புனைந்துரைப்ப தாகும். .

சூர்ப்பனகையின் நாடகம்

வந்த சூர்ப்பணகை இராமனது முகம் நல்ல சூழ்நிலையில் இருப்பதை நோக்கி, அவன் அடியைத் தன் கையால் வணங்கி, அவன் மேல் ஒரு வேலை வீசி - வேல் என்றால் - சுண்ணாகிய - கண்பார்வையாகிய வேலை ஒருமுறை வீசி, பின் பட்டுக்கொள்ளாதவள் போல் வேறு பக்கம் பார்த்துக் கொண்டு, மருண்ட மான் போல் சிறிது நாணி ஒதுங்கி நின்று நல்லவள் போல் நடித்தாள். -

'அவ்வயின் அவ்வாசை தன் அகத்து உடைய அன்னாள் செவ்விய முகம்முன்னி அடி செங்கையின் இறைஞ்சா வெவ்விய நெடுங்கண் அயில் வீசி அயல்பாரா கவ்வியின் ஒதுங்கி யிறைநாணி அயல் கின்றாள்' (37)

அயில் = வேல், நவ்வி = மான். நெடுங்கண் அயில் வீசினாள் என்பதில்தான் காமப்பார்வை அடங்கியுள்ளது.