பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 0 181

பாரின் பேறு

அண்ணா! அந்த மாப்பேர் அழகியின் பெயர் சீதை. அவளுடைய கால்கள் பட நிலம் (மண்) பெரும்பேறு பெற்றுள்ளது.

'பார் அவள் பாதம் தீண்டப் பாக்கியம் அடைந்ததம்மா” (68) அவள் பேசும் சொற்கள் அமிழ்தத்திலிருந்து அள்ளிக் கொண்டவை:

'அஞ் சொற்கள் அமிழ்தின் அள்ளிக் கொண்டவள்” (70) மன்மதன் சிவனின் கண் நெருப்பால் உருவம் இழந்தான் என்று சொல்வது பொருந்தாது. மன்மதன் சீதையின் அழகை எண்ணி எண்ணி அவளை அடையவேண்டும் என்னும் அவாவால் சிறிது சிறிதாக மெலிந்து இளைத்து உருவம் இழந்தான்.

'ஆசையால் அழிந்து தேய்ந்தான்

அருங்கன் அவ்வுருவம் அம்மா” (71)

கெல்லும் புல்லும்

அவளுடைய நெற்றி வில்லையும், விழி வேலையும், பல் முத்தையும் இதழ் பவளத்தையும் ஒக்கும் என்றால் இவை சொல்லளவே தவிர, பொருள் அளவில் உண்மையாக ஒப்பாக மாட்டா. நெல்லுக்குப் புல்லை உவமித்தால் அது நேரான ஒப்புமையாகாது:

"கெல்ஒக்கும் புல் என்றாலும்

நேர் உரைத்தாக வற்றோ" (74) "இந்திரன் சசியைப் பெற்றான்

இருமூன்று வதனத் தோன்றல் தங்தையும் உமயைப் பெற்றான்

தாமரைச் செங் கணானும்