பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 ) ஆரணிய காண்ட ஆய்வு

கண்ணிர்த்துளிகளை முத்தாக உருவகிப்பது ஓர் இலக்கிய மரபு. கவுதமப் புத்தர் காப்பியம் என்னும் நூலில் இது போன்ற உருவகம் இடம்பெற்றுள்ளது. சித்தார்த்தனுக்கு யசோதரையை மண முடிக்கப் பெண்ணைப் பெற்றவர்கள் பிரியமனமின்றி, கண்களிலிருந்து முத்தைச் சிந்திக்கொண்டு அரண்மனையில் கொணர்ந்து சேர்த்தனராம்.

“தத்தைநேர் பெண்ணைப் பெற்றோர் தணந்திட உளமே இன்றி முத்தினைக் கண்கள் சிந்த

மூதரண் மனையில் சேர்த்தார்' (9:5)

கம்பரின் பாடலிலுள்ள முத்தம் சிந்துபு' என்னும் தொடரும் இந்த நூலிலுள்ள முத்தினைச் சிந்த என்ற தொடரும் ஒப்பு நோக்கத்தக்கன.

சீதை எப்படியெல்லாம் செயல்பட்டு இராமனைத் தூண்டியுள்ளாள் என்பதை எண்ணுங்கால், "தையல் சொல் கேளேல் என்னும் ஒளவையின் அறிவுரை நினைவுக்கு வருகிறது. (பெண்ணினம் பொறுத்தருள்க).

ஒட்டப் பயிற்சி

முடிவாக, சீதைக்குக் காவலாய் இலக்குவனைத் தங்க வைத்து இராமன் மானைத் தொடரலானான்.

மாயமான் தொடக்கத்தில் மெல்ல மெல்ல அடிவைத்தும் வெறித்துப் பார்த்தும், அஞ்சுவதுபோல் நடித்தும், மேலெழும்பிக் குதித்தும், காதுகளை நீட்டியும், என்னென்னவோ செய்து, பின்னர், குளம்புள்ள கால்கள் மார்பிலே படும்படி மடித்து மிக விரைவாக ஓடியதாம்.

விரைந்து செல்வதில் மனமும் காற்றும் வல்லவை: ‘மனோ வேகம் - வாயுவேகம் என்பது உலக வழக்கு. அந்த மனத்திற்கும் காற்றுக்கும் இன் லும் விரைவாக ஒடுவதற்குப்