பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் . 179

'வற்கலையர் வார்கழலர் மார்பின் அணி நூலர் விற்கலையர் வேத முறை நாவர் தளிர்மெய்யர் உற்கு அலையர் உன்னை ஓர் துகள்தனையும் உன்னார் சொல் கலை எனத் தொலைவு இல் தூணிகள் சுமந்தார் (54)

சொல் கலை - சொற்களால் யாக்கப்பட்ட நூல்கள். நூல்கள் போல் மேன்மேலும் வளரும் துணியர் என்றால் என்ன? படிக்கப் படிக்க நூல் நயம் மிகுந்த சுவை அளித்துக் கொண்டேயிருக்கும், அது போன்ற தூணி. இங்கே,

'கவில் தொறும் நூல்நயம் போலும்’ (783) "மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு” (396) என்னும் குறள் பகுதிகளும்,

"தேருங் தொறும் இனிதாம் செந்தமிழ்' (59) என்னும் தஞ்சை வாணன் கோவைப் பாடல் பகுதியும் எண்ணத்தக்கன.

இராவணனின் நோக்காடு

தங்கையின் மூக்கை அரிந்தவர்கள் மானிடர்கள் அவர்கள் இன்னும் உயிருடன் உள்ளனர். சிறிதும் நாணம் இன்றி இராவணன் (நான்) இன்னும் உயிருடன் உள்ளான். இருந்தனன் இராவணனும் இன்னுயிர் கொண்டின்னும்' (58) உலகிலுள்ள மறவர்களின் தலைகளை எல்லாம் வெட்டி வென்றாலும், என் தங்கையின் அறுந்த மூக்கு மீண்டும் பொருந்தி முழுமை பெறுமா? -

"முற்ற உலகத்து முதல் வீரர் முடியெல்லாம்

அற்ற பொழுதத்தும் இது பொருந்தும் எனலாமோ?”

(59)