பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 ) ஆரணிய காண்ட ஆய்வு

அரிவையாகிய சீதை விரும்பியதோடு, மைந்தன் (ஆடவன்) ஆன தானும் (இராமனும்) விரும்பியதால், 'அரிவையர் மைந்தர்யாரே ஆதாரம் கூர்கிலாதார்’ என்றான் இராமன்.

வரி சிலை மறை வலோன் = வில் வேதம் வல்ல இலக்குவன். சிலை மறை என்பதில் ஒரு பெரிய பொருள் பொதிந்து கிடக்கிறது. மறை வல்லவர் - மறை ஒதியவர் என்றால், இருக்கு யசுர் சாமம் அதர்வம் என்னும் நான்கு சமசுகிருத வேதத்தில் வல்லவர் என்றே பலரும் பொருள் கொள்கின்றனர். கம்பர் அதனை உடைத்தெறிந்துள்ளார்.

மறை, வேதம் என்பவற்றிற்கு நல்ல நூல் என்று பொருள் கொள்ளல் வேண்டும். பைபிள் (Bible) என்பது கிறித்துவ வேதநூலைக் குறிக்கும். இதற்கு நூல் என்பதே நேர்ப்பொருள். கிறித்துவர்கட்கு அது சிறந்த நூலாகத் தெரிவதால் இதனைப் பைபிள்' என்றே கூறிவிட்டனர்.

இந்த Bible என்னும் சொல் இலத்தீனிலிருந்து வந்தது. Bibliographia என்னும் இலத்தின் சொல்லுக்கு நூல் - புத்தகம் என்பது பொருள். Bibliographic என்னும் பிரெஞ்சுச் சொல்லுக்கும் நூல் என்பது பொருள். Bibliotheca என்னும் இலத்தீன் சொல்லுக்கு நூல் நிலையம் என்பது பொருள்.

எனவே, நூல் என்னும் பொருள் உடைய வேர்ச் சொல்லாகிய Bible என்பது கிறித்துவ வேதத்தைக் குறிப்பது போலவே, மறை என்பது சமசுகிருத வேதத்தையே குறிப்பதாகக் கொண்டு விட்டனர். திருக்குறளை மறை எனக் கூறுவதைச் சிலர் ஒத்துக் கொள்வதில்லை. திருக்குறள் நல்ல நூல் - தமிழில் உள்ள ஒரு Bible அது.

எனவே, சிலை மறை என்பதற்கு, வில் கலை தொடர்பான நூல் எனப் பொருள் கொள்ளல் வேண்டும்.