பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 ஆரணிய காண்ட ஆய்வு

படுவேனாக எனச் சூள் உரைப்பதாகவும் இலக்கியங்களில் படித்திருக்கலாம்.

கம்ப இராமாயணத்திலேயே பள்ளிபடைப் படலத்தில்,

“வழக்கில் பொய்த்துளோன்'

“மன்றிடைப் பிறர் பொருள் மறைத்து வவ்வினோன்

என்றிவர் உறு தரகு என்னது ஆகவே' (101, 102)

என்று பரதன் கூறியிருப்பது ஈண்டு ஒப்புநோக்கத் தக்கது.

"வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே

பாதாள மூலிவந்து படருமே - மூதேவி

சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே

மன்றோரம் சொன்னார் மனை” (23) என்னும் ஒளவையின் நல்வழிப் பாடலும் ஒப்புநோக்கத் தக்கது. வேதாளம் = பேய், சேடன் - பாம்பு, மன்று ஒரம் சொல்லல் = நீதிமன்றத்தில் நடுநிலை தவறிப் பொய்ச் சான்று புகலுதல்.

பொய்ச் சான்று கூறுபவரைப் பூதம் புடைத்து உண்ணும் எனச் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது:

'பொய்க் கரியாளர் புறங்கூற் றாளர்என்

கைக்கொள் பாசத்துக் கையகப் படுவோர் எனக் காதம் நான்கும் கடுங்குரல் எழுப்பிய பூதம் புடைத்துனும் பூதசதுக்கமும்” (5; 131-134) என்பது பாடல் பகுதி. மற்றும், கலித்தொகையில் உள்ள பகுதி கடுமையாய்த் தோன்றுகிறது. அதாவது, பொய்க்கரி கூறியவன் நிழலுக்காகத் தங்கும் மரம் வாடி விடுமாம்.

'கரிபொய்த்தான் கீழிருந்த மரம்போலக் கவின்வாடி

எரிபொத்தி என்னெஞ்சம் சுடுமாயின் எவன்செய்கோ' (34:10, 11)