பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் () 215

கற்புடைய மங்கையர்க்கு அருந்ததியை ஒப்புமையாகச்

சொல்வது மரபு. அருந்ததி விண்ணில் வடபுறம், மீனாய் (நட்சத்திரமாய்) உள்ளாளாம். அதனால் அவளை 'வடமீன்' என இலக்கியங்கள் கூறி, கற்புடைய மகளிர்க்கு ஒப்புமை யாக்கும். சில அகச் சான்றுகள்:புறநானூறு - 122 - 8:

'வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை” பெரும்பாணாற்றுப்படை - 302, 303:

'பெருநல் வானத்து வடவயின் விளங்கும்

சிறுமீன் புரையும் கற்பின் நறுநுதல்”

கலித்தொகை - 2.

'வடமீன்போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள்”

சிலப்பதிகாரம்:

"தீதிலா வடமீனின் திறம் இவள்திறம்” (1:27)

வடமீன் கற்பின் மனையுறை மகளிர்" (5:129) ஐங்குறுநூறு.

“அருந்ததி அனைய கற்பின்

குரும்பை மணிப்பூண் புதல்வன் தாயே (442:4, 5)

திரிகடுகம் -

“அருந்ததிக் கற்பினார் தோளும்’ (1)

இவ்வாறு மற்ற கற்புடைய மாதர்க்கு அருந்ததியை உவமையாகக் கூறுவதிருக்க, இங்கே கம்பர், சீதையை 'அருந்ததி' எனவே கூறிவிட்டார். ஆயினும், உவமை ஆகு பெயராய் அருந்ததி போன்ற சீதை எனப் பொருள்

கொள்ளல் வேண்டும். இதனால் சீதையின் சிறப்பு விளங்கும்.