பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் () 87

"இலக்கிய ஒப்புமை காண்டல்' என்னும் முறையில், புறநானூற்றில் உள்ள ஒர் எண்ண இயைபைக் காணலாம்: தந்தை பாரியையும் பறம்பு மலையையும் இழந்தபின், அடுத்து வந்த முழுநிலாப் பருவ நாளில் பாரி மகளிர் பின்வருமாறு கூறினர்.

சென்ற திங்களின் (மாதத்தின்) முழுநிலா நாளில் எம் தந்தையும் இருந்தார்; எம் குன்றும் இருந்தது; இன்றைய முழுநிலா நாளில் எம் தந்தையும் இல்லை; எம் மலையையும் வேற்றரசர் பறித்துக் கொண்டனர்:

“அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்

எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின் வென்றெறி முரசின் வேந்தர்எம் குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே” (112) என்பது பாடல். இவ்வாறு, முன் நடந்ததைப் பின் உள்ளதோடு தொடர்பு படுத்திப் பார்த்தார் சட்ாயு. இனி அடுத்த செய்திக்குச் செல்லலாம்:

எமனைக் கூற்றினார் என ஆர்' சிறப்பு விகுதி கொடுத்துள்ளது. எமனை உயர்த்துவது போல் கிண்டலாகப் பழித்தலாம். உணர்வு இழந்த என்பது கவனிக்கத் தக்கது. எமன் உணர்ச்சி அற்றவனாம்.

'உரலுக்கு ஒரு பக்கம் இடி - மத்தளத்திற்கு இரு பக்கமும் இடியாம். எமனது நிலைமையும் இதேதான். அவனை நீதிதேவன், எம தருமன் என்றெல்லாம் அவனது பாகுபாடற்ற நேர்மைக்காகப் புகழ்வது ஒரு பக்கம். அதே நேரத்தில் அவனைத் தூற்றுவது மற்றொரு பக்கமாகும்.

'கொடுங் தொழிலாளன் கொன்றனன் குவிப்ப” என்று மணிமேகலை தூற்றுகிறது.