பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 C) ஆரணிய காண்ட ஆய்வு

"அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்

அல்லல் உழப்பதாம் நட்பு' (787) என்னும் குறள்கள் ஆய்வு செய்யத் தக்கன.

இந்தக் கருத்துகளை உட்கொண்டே நிலம் காவல் அது கிடக்க நிலையாத நிலையுடையேன் நேய நெஞ்சின் நலம் காண நடந்தனையோ என்றான் சடாயு,

அடுத்து, கம்பர் இந்தப் பாடலில் ஒரு சொல் விளையாட்டு விளையாடியுள்ளார். அதாவது:

மிருகத்திற்கு விலங்கு என்ற பெயர், மக்களினின்றும் விலகியிருப்பதால் வந்ததாகக் கூறுவர். சடாயு கூறுகிறான்; யான் விலங்கு ஆதலால், உயிர்விட வேண்டிய கட்டாயத்தி லிருந்து விலகிவிட்டேன் போலும் எனக் கூறுகிறான். பறவையும் விலங்கு எனப்படும். . . .

இவ்வாறாக, இந்தப் பாடலைச் சுவைக் கேணியாக ஆக்கியுள்ளார் கம்பர். தோண்டத் தோண்டச் சுவை நீர் ஊறுகிறது. - •

இங்கே, பிரபுலிங்க லீலையில் உள்ள ஒரு பாடல் ஒப்பு நோக்கி மகிழ்தற்கு உரியது. அதாவது:- நல்லவரைக் காணலாகாது - கண்டு விடின் அவருடன் நட்பு கொள்ளலாகாது - நட்பு கொண்டுவிடின் பிறகு பிரியலாகாது - பிரியநேரின் உயிரை விட்டுவிடவேண்டும் - என்று அல்லமர் என்னும் அருளாளரைப் பிரிந்த அன்பர்கள் கூறுவதாக அப்பாடல் அமைந்துள்ளது.

காணுதல் ஒழிக நல்லார்க் காணின் அங்கு அவர்பால்

& நட்புப் பேணுதல் ஒழிக பேணில் பிரிவுறல் ஒழிக உற்றால் மானுயிர் உடம்பில் வாழும் வாழ்க்கை போய் ஒழிக’

(19:4)