பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் () 165

'ஆய்வளை மகளிரொடு அமரர் ஈட்டத்தார்

தூயவெங் கடுங்கணை துணித்த தங்கள்தோள் பேய் ஒருதலை கொளப் பிணங்கி வாய்விடா நாய் ஒருதலை கொள நகை உற்றார் சிலர்” (122) கயிறு இழுப்புப் (Tug of war) போட்டி போல, ஒரு தோளைப் பேய் ஒரு பக்கமும் நாய் ஒரு பக்கமும் இழுப்பது, நமது ஏழை நாட்டில், எச்சில் இலையை ஏழை ஒரு பக்கமும் நாய் ஒரு பக்கமும் இழுப்பது போன்றுள்ளது. அந்தோ!

பொய்ச்சான்று

பொய்ச்சான்று கூறிய கொடியவன் குலத்தோடு

அழிவதுபோல, வஞ்சக அரக்கர் இராமன் அம்பால் வேரோடு அழியலாயினர்:

'கைக்கரி அன்னவன் பகழி கண்டகர்

மெய்க்குலம் வேரொடும் துணித்து வீழ்த்தின மைக்கரு மனத்தொரு வஞ்சகன் மாண்பிலன் பொய்க்கரி கூறிய கொடுஞ்சொல் போலவே (124) கைக்கரி : யானை, அன்னவன் - இராமன். பகழி = அம்பு. கண்டகர் கொடியவர். மெய்க்குலம் = உடல் தொகுதிகள். பொய்க்கரி = பொய் சாட்சி.

வாய்ப்பு நேரும்போ தெல்லாம் வரலாற்றின் நடுவிலே நல்ல கருத்துகளைப் புகுத்துவதில் வல்லவர் கம்பர். பொய்ச் சான்றின் கொடுமையைக் கண்டிக்க இந்த இடத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.

துன்பப் படுபவர் சிலர், நான் பொய்ச்சான்று சொன்னேனோ என வருந்துவதாக இலக்கியங்களில் படித்திருக்கலாம். மற்றும் சிலர், நான் இந்தத் தீமையைச் செய்தேனாயின் அல்லது நான் இந்த நல்லதைச் செய்யே னாயின், பொய்ச் சான்று சொன்னவர் படும் பாட்டைப்