பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 0 ஆரணிய காண்ட ஆய்வு

யாரென வியத்தல்

சூர்ப்பனகை எ ண் ணு கி றா ள். இவன் யாராக இருக்கலாம்! இவனுக்கு உருவம் இருப்பதால், உருவம் இல்லாத மன்மதன் என்று சொல்ல முடியாது; ஆயிரம் கண்கள் இல்லாமையால் இந்திரனும் அல்லன்; மூன்று கண்கள் இன்மையின் சிவனும் அல்லன்; நான்கு தோள்கள் இன்மையின் திருமாலும் ஆகான்

'சிங்தையின் உறைபவற்கு உருவம் தீர்ந்ததால்,

இந்திரற்கு ஆயிரம் நயனம், ஈசற்கு முந்திய மலர்க்கண் ஓர்மூன்று, நான்குதோள் உங்தியின் உலகளித்தாற்கு என்று உன்னுவான்’ (12)

சிந்தையின் உறைபவன் = உருவம் இன்றி உள்ளத்தால் உணரக்கூடிய மன்மதன். உலகு அளித்தான் = காத்தல் கடவுளாகிய திருமால்,

இவ்வாறு எண்ணுவது மேலும் சில இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது. முத்தொள்ளாயிரத்தில் பெண் ஒருத்தி சேரமன்னனை நோக்கி இவ்வாறு எண்ணுவதாக ஒரு

பாடல் உள்ளது.

இவனுக்கு இரண்டே கண்கள் இருப்பதால் ஆயிரம் கண்களுடைய இந்திரன் அல்லன் இவன். முடியிலே பிறை இன்மையால் சிவனும் அல்லன்; கோழிக் கொடியும் ஆறுமுகங்களும் இன்மையால் முருகனும் ஆகான்; எனவே, இவன் அரசாழி உருட்டும் சேரமன்னனே யாவான்:

'இந்திரன் என்னின் இரண்டே கண் ஏறுார்ந்த

அந்தரத்தான் என்னின் பிறைஇல்லை-அந்தரத்துக் கோழியான் என்னின் முகன் ஒன்றே கோதையை ஆழியான் என்றுணரற் பாற்று' (130)