பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 0 261

விண் வெளி இயற்கையாகக் கருமையாயிருக்கும் என்பது புலனாகிறது.

ஒரு கூடம் இருட்டாய் இருக்கிறது. அங்கே ஒரு விளக்கு வைத்தால் வெளிச்சமாயிருக்கிறது. கூடத்திலுள்ள தூண்களுக்குப் பின்னால் இருக்கும் இருட்டை நிழல் என்கிறோம். துணாலோ வேறு பொருளாலே வெளிச்சம் மறைக்கப்பட்டிருக்கும் இருட்டுதான் நிழல் எனப்படுவது என்பது விளங்கும்.

இராம இலக்குவர் பளபளக்கும் ஒரு பளிங்கு அறையில் தங்கினர். இராமன், பருகுவதற்குத் தண்ணிர் கொணரும்படி இலக்குவனுக்குப் பணித்தான். இலக்குவன் நீர் கொணரத் தனியே சென்ற இடத்தில் அயோமுகி என்னும் அரக்கி கண்டு அவன் மேல் காதல் வலை வீசினாள்:

'அங்கு அவ்வனத்துள் அயோமுகி ஆன

வெங்கண் அரக்கி விரும்பினள் கண்டாள்” (39)

யாவள் அடி

இலக்குவன், அருவருப்பான தோற்றம் உடைய அந்த அரக்கியை நோக்கி, காட்டிலே இருட்டு நேரத்திலே இங்கு வந்த நீ யாரடி என்று வினவினான்:

மாஇயல் கானின் வயங்கு இருள் வந்தாய்

யாவள் அடி உரைசெய் கடிது என்றான்” (51) கடிது - விரைவாக. அவளை உடனே விரட்டுவதற்காக விரைவில் யாரெனக் கூறு என்றான்.

அறிமுகம்

அன்போடு உன்னை அடைய வந்த அயோமுகி நான் என்றாள்:

'ஏசல்இல் அன்பினளாய் இனிது உன்பால்

ஆசையின் வந்த அயோமுகி என்றாள்' (52)