பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 131

வில் எடுத்து அம்பு எய்தால் இறந்து விடுவாள்-பெண் அவள்-அதனால், சுற்றுவாள் (சுழல்கத்தி) எடுத்தான்.

எரி போன்ற அவள் செம்பட்டைக் கூந்தலை இடக் கையால் முறுக்கிப் பிடித்துக்கொண்டான். இந்த நேரத்தில் அவனைத் தூக்கிக் கொண்டு மேலே எழ முயன்றாள் அரக்கி. அதற்கு இடம் கொடாமல் இலக்குவன் அவனைக் கீழே தள்ளி உதையும் கொடுத்தான்; இனிக் கொடுஞ் செயல்கள் செய்யாதே என அறிவுரை கூறிக் கொண்டே எளிதில் அவளுடைய மூக்கு, காது, முலைக்கண்கள் ஆகியவற்றை அறுத்தான்; பின்னர் ஒரளவு கோபம் தணிந்து கூந்தலையும் விட்டான்.

மூக்கும் காதும் என வாளா கூறி, வெம் முரண் முலை என முலையை மட்டும் அதன் இயல்புக்கு ஏற்ற அடை மொழிகள் தந்துள்ளார். எனவே, முலையைச் செயற்கை முறையில் பெரிதாகக் காட்டக்கூடாது என்பது அறியவரும்.

மூக்கறுப்பு

பகை உள்ள இடத்தில் முக்குக்கு மிக்க மரியாதை' உண்டு. என்னாடா! மூக்கைக் கடித்து விடுவாயா? ஏண்டா! மூக்கை அரிந்துவிடுவானா அவன்? டேய் முக்கு வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்ளும் சாக்கிரதை, வெற்றிலை பாக்குச் சுண்ணாம்பு போட்டால் சிவப்பாய் இருக்கு மல்லவா? அது போல் மூக்கில்-குத்துகிற குத்தில் சிவந்த குருதி கொட்டுமாம்.

முன்பெல்லாம் போரிலே, எதிர் வீரர்களின் மூக்கு களையும் பெண்களின் முக்குகளையும் அரிவது உண்டு. எதிர்த் தலைவனுக்கு அரிந்த முக்குகளை (பார்சல்) அனுப்புவதும் உண்டு என வரலாற்றில் படித்திருக்கலாம்.