பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178世 ஆரணிய காண்ட ஆய்வு

உன்னை இவ்வாறு செய்தவர் யார் எனத் தங்கையை வினவினான்.

மானிடர் தடிந்தனர்

காட்டில் தங்கி உலகம் காப்பவர்; மன்மதன்போல் அழகு மிக்கவர்; மேல்-கீழ் உலகங்களில் உடம்பழகில் ஒர் ஒப்பும் இல்லாதவர்கள் ஆகிய மானிடர்கள் வாளால் என் உறுப்புகளைக் குறைத்தனர் என்றாள் அரக்கி.

"கானிடை அடைந்து புவி காவல் புரிகின்றார்

மீனுடை நெடுங் கொடியினோன் அனையர் மேல்கீழ் ஊனுடை உடம்புடைமை ஓர் உவமை இல்லார் மானிடர் தடிந்தனர்கள் வாள் உருவி என்றாள்' (50)

மீனுடைக் கொடியினோன் மீன்கொடி உடைய மன்மதன். நமக்குரிய காட்டில் அவர்கள் வந்து காவல் செய்கின்றனர் . அவர்கள் மனிதர்கள் - எனக் கூறிச் சினத்தைத் தூண்டினாள்.

அச்சம் தவிர்

இதைக் கேட்ட இராவணன் எங்கும் கேட்கும்படி பெருநகை புரிந்தான். கண்கள் கனல்கக்கின. நீ சொல்வது உண்மையா? பொய் சொல்லாதே. அச்சம் தவிர்த்து நடந்ததைச் சரியாகக் சொல் என்று திரும்பவும் வினவினான்.

சொல் கலை

அரக்கி கூறுகிறாள்:

அவர்கள் மரவுரி உடையினர்; பூனூல் பூண்டவர்; வில் கல்வி பயின்றவர்; வேதம் ஒதுபவர்; மென்மையான உடலினர்; உன்னை ஒரு தூசு அளவும் மதியாதவர். சொல் கலைபோல் கொள்ளக் கொள்ளக் குறையாமல் வளர்கின்ற

அம்பறாத் தூணி உடையவர்: