பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 0 ஆரணிய காண்ட ஆய்வு

சிந்தினன் மணலின் வேதி

தீதுஅற இயற்றித் தெண்ணீர் தந்தனன் தாதை தன்னைத்

தடக்கையான் எடுத்துச் சார்வான்’ (221) பின்னர் தீமூட்டி எரித்து, தந்தைக்கு மைந்தன் செய்ய வேண்டிய மரபுகளை யெல்லாம் செய்து தான் குளித்து விட்டு, சடாயுவுக்கு ஆற்ற வேண்டிய நீர்க் கடனையும் இராமன் முடித்தான். சடாயு கொடுத்து வைத்தவனே.

வேலையின் வேலை சார்ந்தான்

பலிக்கடன் முதலிய பல வகையான மரபுச் செயல் களையும் முடித்து இராமன் நின்ற வேலையில் (நேரத்தில்), ஞாயிறானவன், சடாயு தன் குலத்தில் (சூரிய குலத்தில்) தோன்றியவ னாதலின், தானும் வருந்தி, சடாயுவுக்கு ஆற்ற வேண்டிய கடன்களை யெல்லாம் ஆற்றுவதற்காக நீரில் குளித்தான் என்று சொல்லுமாறு மேற்கே உள்ள வேலையில் (கடலில்) மூழ்கினான்:

“பல்வகைத் துறையும் வேதப்

பலிக்கடன் பலவும் முற்றி வெல்வகைக் குமரன் நின்ற

வேலையின் வேலை சார்ந்தான். தொல்வகைக் குலத்தின் வந்தான்

துன்பத்தால் புனலும் தோய்ந்து செல்வகைக்கு உரிய வெல்லாம்

செய்குவான் என்ன வெய்யோன்’ (225) குமரன் - இராமன். குலத்தில் வந்தான் = சடாயு. வெய்யோன் = ஞாயிறான். வேலை என்பதற்கு, செயல், கடல் என்னும் பொருள்களோடு வேளை - நேரம் என்னும் பொருளும் உண்டு, குமரன் நின்ற வேலையின் வெய்யோன் வேலை சார்ந்தான்’ என்னும் தொடர் நயமா யுள்ளது.

ஞாயிறு இயற்கையாக மேலைக் கடலில் மூழ்கியதை, தன் குலத்தில் தோன்றிய சடாயுவின் சாவு தொடர்பாக மூழ்கியதாகக் கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறியிருக்கும் இந்த அமைப்பு தற்குறிப் பேற்ற அணி எனப்படும்.