பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் ) 75

தொலைதூரத்தில் பார்வையைச் செலுத்துவது மற்றொரு

இ! )ெ அதி.

மேற்கூறியவற்றுள் மூன்றாம் வகையான தொலை நோக்கு கழுகின் தொலை நோக்குக்கு ஒப்புமையாக்கப் பட்டுள்ளது. கழுகும் தொலைவிலுள்ள இரையையோ வேறு எதையோ நாடி நோக்கும். அதன் கண்களும் சிறியனவா யிருக்கும். ஏதோ ஒரு வகையில் திறமை காட்டுபவனை, அவனா - அவன் கழுகுக் கண்ணனாயிற்றே - என்று கூறுவது உலகியலில் உண்டு. சடாயுவும் இவ்வாறு

நோக்கினான்.

சொற்களின் குறைபாடு

மேலும், சடாயு மிக்க புகழ் உடையவனாம். அவனுடைய

புகழை அறிவிக்கச் சொற்கள் போதாவாம்:

'சொல்பங்கம் உறங்மிர் இசையின் கம்ம்ை'(8)

பங்கம்-குறைவு. இசை = புகழ். சும்மை-தொகுதி - மிகுதி.

சொல் பங்கம் உறுதல் என்றால், அவனுடைய புகழ் முழுவதையும் சொல்லப் போதிய சொற்கள் இல்லை என்பதாம். உலக வழக்கில்கூட, அதைப்பற்றி - அவரைப் பற்றி வர்ணிக்கச் சொல் இல்லை - சொல் போதாது என்று கூறுவது உண்டு. ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேட னாலும் முற்றும் சொல்லி முடியாது எனப் புலவர்கள் இலக்கியங்களில் எழுதியிருப்பது ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. . -

ஐய நோக்கு

இத்தகைய சடாயுவைக் கண்ட இராம இலக்குமணர், இவன் யாராக இருக்கலாம்? அரக்கன் எவனாவது இவ்