பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 0 117

மற்றும், புதிதாய் வந்தவர்களை நோக்கி, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? உங்கள் பெயர் என்ன? நீங்கள் யார்? - உங்களைச் சேர்ந்தவர்கள் யார்? - என்றெல்லாம் வினவுகிற உலகியலின்படி இராமன் வினவியிருப்பது இயற்கையாய் அமைந்து நயம் பயக்கிறது.

திறமையான அறிமுகம்

அரக்கி மிகவும் திறமையுடன், தான் பெரிய இடத்துப் பெண் என அறிவிக்கும் முறையில் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.

நான் படைப்புக் கடவுளாகிய பிரமனின் கொள்ளுப் பேர்த்தி. ஒரு வகையில் சிவனுக்கு நண்பனான குபேரனின் தங்கை நான். இன்னொரு வகையில், எட்டுத் திக்கு யானை களையும் வென்றவனும் வெள்ளி மலையைத் தூக்கியவனும் மூவுலகங்களையும் ஆள்பவனும் ஆகிய இராவணனுக்கும் தங்கை நான். என் பெயர் காமவல்லி. நான் ஒரு கன்னி - என்றாள்.

'பூவிலோன் புதல்வன் மைந்தன்

புதல்வி முப்புரங்கள் செற்ற சேவலோன் துணைவ னான

செங்கையோன் தங்கை திக்கின் மாவெலாம் தொலைத்து வெள்ளிமலை

எடுத்து உலகம் மூன்றும் காவலோன் பின்னை காம

வல்லியாம் கன்னி என்றாள்' (39)

பூவிலோன் = பிரமன். சேவலோன் = விடையூர்தி உடைய சிவன். செங்கையோன். குபேரன். காவலோன் = இராவணன். சே = விடை.