பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விஞ்ஞானிகள்

11


இறைத்து வயல்களுக்குப் பாய்ச்சும் இயந்திரம் ஒன்றினைச் செய்து கொடுத்தார்.

அவருக்குத் தன்னம்பிக்கையும், அறிவுக் கூர்மையுமிருந்ததால் எதையும் சாதிக்கலாமென்ற நம்பிக்கையுடையவர். விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டால், உணவு, துளக்கம் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். அதற்கு இவரும் விதிவிலக்கல்ல.

ஒரு நாள் அரசனிடம் பேசிக் கொண்டிருந்தபோது “அரசே ஒரு கடப்பாரையும், அதை ஊன்றிக்கொள்ள இடமும் தாரும்; இந்த உலகத்தையே தூக்கி எறிந்து விடுகிறேன் பாரும்” என்ற ராம். “அப்படி உலகத்தைப் புரட்ட வேண்டாம்; யாராலும் நகர்த்த முடியாத கனமான பொருட்களைப் புரட்டினல் போதும்” என்று சொல்லிவிட்டு “அதோ புதிதாகக் கட்டப்பட்டிருக்கிறதே அந்தக் கப்பலில் மக்களையும் சாமான்களையும் நிரப்பி அதைப் புரட்டும் பார்ப்போம்” என்றானாம் மன்னன். அவர் சில கப்பிக் கட்டைகளையும் கயிற்றையும் கொண்டு ஒரு இயந்திரம் செய்து, கப்பிக் கட்டையைச் சுற்றியவுடனே, அந்தப் கப்பல் இருப் பிடத்திலிருந்து நகர்ந்து பாயை விரித்துக்கொண்டு தன்னிடம் ஒடி வருவதைக் காண்பித்தாராம்.

இவ்வளவு பெரிய விஞ்ஞானியாயிருந்தும் அவர் எதை எழுதினாலும் தன்னோடு படித்த கோண் என்பவரிடம் படித்துக்காட்டாமல் வெளியிடமாட்டார்.

அரசனுக்கும் மக்களுக்கும் பயன்படக்கூடிய எத்தனையோ இயந்திரங்களைச் செய்துக் கொடுத்தார். அவை பயன் பட்டாலும், பயன்படாவிட்டாலும், அவற்றிற்கு அவர் சிறப்புக் கொடுக்கவில்லை. ஆனால், அதனால் எவ்வளவு ஆராய்ச்சிகளைச்செய்திருக்கிருேம் என்பதுதான் அவர் முடிவு. கோளங்கள், வட்டங்கள், வட்டத்தின் அளவு என்பன போன்ற பல நூல்களே அவர் எழுதியதாக, அவர் காலத்தில் வாழ்ந்த பெரியவர்கள் கூறினர்கள். ஆனால், கிடைத்தவை