பக்கம்:அறநெறி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஓதுவது ஒழியேல்

“கல்வி கரையில கற்பவர் நாள் சில” என்று தமிழிலும் “Art is long; Life if Fleeting” argårgy offiosylth கல்வி கடல்போல் பரந்துகிடக்கும் தன்மையினைப் புகல்வர்.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர் -திருக்குறள் 198 என்று திருவள்ளுவர் பெருமானும் கல்வியின் கணக்கிலாச் சிறப்பைக் கழறியுள்ளார். அம்மட்டோடன்றி ஒரு பிறவி யில் ஒருவன் கற்ற கல்வி, ஏழு பிறப்பிலும் உதவும் நீர்மைத்து என்றும் கூறியுள்ளார்.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து -திருக்குறள் 398

கற்கை கன்றே கற்கை கன்றே

பிச்சை புகினும் கற்கை கன்றே (35)

என்றும்

எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்

அக்குடியில் கற்றோரை மேல்வரு கென்பர் (38)

என்றும்

அறிவுடை யொருவனை அரசனும் விரும்பும் (39)

என்றும் நறுந்தொகை கூறும் கல்வியின் சிறப்பினைப் பழந்தமிழர் நன்கறிந்திருந்தனர். ஏழை மாணவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/31&oldid=586884" இலிருந்து மீள்விக்கப்பட்டது