பக்கம்:அறநெறி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 அறநெறி

என்றே ஒர் அதிகாரம் படைத்திருக்கும் திருவள்ளுவப் பெருந்தகையின் ம தி நு ட் ப ம் பாராட்டத்தக்கது. அரசனைச் சார்ந்திருப்போர் சொல்வன்மை மிக்கவர் களாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் (குறள் 200)

என்றும் அவர் சொல்லியிருப்பதனைக் காணும்பொழுது வெல்லும் சொல்லை விரும்பி மேற்கொள்ள வேண்டிய திறப்பாடு புலனாகின்றது. வெல்லும் சொல் இன்மை அறிந்தே ஒரு சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிடும் கருத்து உணர்ந்து போற்றத் தக்கது.

கிரேக்க நாட்டு வரலாற்றினைப் படிக்கும்பொழுது, அத்தொன்னெடுங் காலத்திலேயே டெமாஸ்தனிஸ் முதலானோர் தம் நாவின் திறத்தால் நாட்டை அசைத்த செயல் புலப்படுகின்றது. நெப்போலியன் பிரெஞ்சு நாட்டை உருவாக்கிய திறம் உணரப்படு இன்றது. வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்தின் புகழ் வாய்ந்த பிரதமராய்த் துலங்கிய மேன்மை புலப்படுகின்றது. எட்மண்ட் பர்க்போன்றவர்கள் பாராளுமன்றத்தில் பேசிய பேச்சின் பெருஞ்சிறப்பு இன்றும் பலராலும் மேற்கோள் காட்டிப் பேசப்படுகின்றது.

திருஞானசம்பந்தர், சங்கரர், இராமானுஜர் முதலான சான்றோர்கள் தத்தம் சமய நெறிகளை வளர்க்கத் தம் நாக்கு வன்மையினை உலகறியக் காட்டி உயர்ந்த செயல் தெற்றென விளக்கமுறுகின்றது. அவர் களின் பேச்சாற்றலே அவர்களின் கருத்துகளுக்கு வெற்றி தேடித் தந்ததனைக் காண்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/70&oldid=586964" இலிருந்து மீள்விக்கப்பட்டது