பக்கம்:ஆண்டாள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

ஆண்டாள்


வைத்துவிடுவது வழக்கமாயிற்று. தந்தையின் வரவினைக் கடிதென உணர்ந்து, மாலைகளைக் களைந்து, குடலையில் இட்டு எப்போதும்போல் இருந்துவிடுவார். ஆதலின், இந்த அன்புச் செயலைப் பல நாட்கள் பெரியாழ்வார் அறிதற்கே வாய்ப்பில்லாமற் போயிற்று.

இங்ஙணம் நாடோறும் நடைபெற்றது. இவர் கோதையாகவே, கோதை சூட்டித் தரத் தொடங்கிய நான்தொட்டு மலர்மாலை பின்னும் புதிய மண்ம் வீசி, மலர் வாடினும் இயற்கையோடு இயைந்த மணம் குறைதல் இல்லை இது வழிபடுவாருக்கு வியப்பை அளித்தது; ஆயினும் பெரியாழ் வாரின் பக்தியின் மேன்மை அது என்று எண்ணி அவர்பால் அர்ச்சகருக்கு அளவில்லா மதிப்பு உண்டாயிற்று.

ஒரு நாள் கோதை தன் ஆடை அணிகளை யணிந்து, மாலைகளையும் குட்டி, மாலவனோடு ஒப்புமை கருதி 'உவந்து ஏற்பானோ' என்றெண்ணிச் சிந்தித்திருந்தார். தன்னை மறந்து, தன் சூழலை மறந்து, தந்தை வந்து விடுவாரே என்பதையும் மறந்து, நங்கை தலைவன் தாளையும் தோளையும் எண்ணியிருக்கின்றார். பெரியாழ்வார் வந்து இவருடைய கோலத்தைக் காணுகின்றார். கண்டு நடுங்கினார். தம் மகளாரைச் சினந்தார், சிறிதே சினந்தார். கோதை கவலையை முகத்தில் தேக்கி வாய்பேசாது வாளாவிருந்த நிலை அவரை வாட்டுகின்றது. "இத்தகைய செயலை இனிச் செய்யாதே! அருட்கடலாகிய பெருமான் நீ அறியாது செய்த பிழையைப் பொறுப்பானாக!" என்று தம் மகளைத் தேற்றுகின்றார்.

கோதையாரும் தம் குற்றம் உணர்ந்தார். ஆழ்வார், சூடிய மாலைகளை இறைவனுக்குச் சூட்ட விரும்பினாரல்லர், புதிய மலர்களைக் கொண்டு வந்து கட்டிக்கொண்டிருக்கும் போது, அடியில் கண்ட சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் அழகுவாய்ந்த திருவுருவம் மனக்கண்ணில் தோன்றுகின்றது. அவரை மருட்சியும்தெருட்சியும் ஒருங்கே அலைக்கழிக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/40&oldid=957509" இலிருந்து மீள்விக்கப்பட்டது