பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

107


போலவும் நாம் வாரிவழங்குகின்ற இறைவன் ஆனாலும், அஃபிரிக்க காட்டுப் பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்காக, நம் வாழ்க்கையையே இழந்துவிடக்கூடிய பெருமானம் பெற்றவர் ஆனாலும் இயேசுவின் அன்பைப் போன்ற அன்பினை நாம் பெற்றிராவிட்டால் எம் மக்கள் பணிக்குப் பொருள் ஒன்று மிராது.

"அன்பு இடைவிடாது துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும்". அன்பு, நீடிய அமைதியும் தயவும் உள்ளது. அன்புக்குப் பொறாமையில்லை. அன்பு தன்னைப் புகழாது; இறுமாப்பா யிராது. இத்தகைய அன்பினைப் பொதுவான மாந்தரின் அன்புடன் ஒப்பிட்டுப் பார்த்தல் கூடாது.

அன்பு, நெடுங்காலத்துக்கும் தொடர்ந்து துன்புறும் என்பது சரி. தவிர்க்க முடியாத நிலை வரும் போது அதே அன்புக்கும் மகிழ்வற்ற நிலையும் இன்னல்களும் வந்துறுகின்றன. இயற்கையில் மாந்தரின் அன்பு கூடத் தன்னலத்தில் தான்் தோன்றுகிறது. அந்தத் தன்னலம் குலைந்து போகும்போது இன்பங்களாக மாறிவிடுகின்றது.

"அன்பு, பொறாமை கொள்ளாது" உலகம் எங்கிலும், பொருளாதார, சமுதாய, பேரெழுச்சிகள் பரவியதற்குக் காரணம் செல்வரைக் கண்டு, ஏழைகள் கொண்ட பொறாமை; வெற்றியாளரைக் கண்டு தோல்வியுற்றவர்கள் கொண்ட பொறாமை, புலன் அறிவு, ஏழை எளியவர்களை அமைதியற்றவர்களாக ஆக்குகிறதே தவிர, அவர்கள், அமைதி பெற்றிட நல்வாழ்வு காண, ஒரு விதிமுறையைத் தரவில்லை.

"அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது" உண்மையான இயற்கையான அன்பு, தற்புகழ்ச்சி அணிவகுப்பை நடத்தாது. தன்னைப்பற்றி புகழ் தம் பட்டம் அடிக்காது. தற்பெருமை தன் செயல் வெற்றியை எப்போதும் பறைசாற்றிக் கொண்டிருக்கும். ஆனால், இதற்கெல்லாம் மாறுபட்டது எதிரானது இயேசுவின் கனிந்த அன்பு.

"பண்பற்ற முறையில் நடந்து கொள்ளாது" மணமுறிவு முறைமன்றங்களுக்குச் சென்றுபாருங்கள் இயற்கையாக மாந் தருக்கு உள்ள அன்பு எப்படிப்பட்டது என்பதை அறியலாம். கணவன் மனைவி ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/111&oldid=1461636" இலிருந்து மீள்விக்கப்பட்டது