பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


நின்ற நிலையினின்று மீண்டு செல்லாது விரைந்து அவளிடம் சென்றேன். அவளை அனைத்துக் கொண்டேன். யான் அவளை நம் இல்லத்துக்கு வருமாறு அழைத்தேன். அவள் மிகவும் மயங்கினாள். அப்போது “குற்றம் இல்லாத இளமகளே! நீ எதற்கு மயங்கினாய்? இச் சிறுவனுக்கு நீயும் தாயே ஆவாய்!” என்று கூறினேன்.

அவள், ஒருவர் தாம் செய்த களவைக் கண்டு கொண்ட வர் முன், உடன்பட்டு நிற்பவரைப் போல், முகம் கவிழ்ந்து நிலத்தைக் கால் விரலால் கீறி நாணி நின்றாள். அத்தகைய வரின் நிலையைக் கண்டு யானும் இரங்கி வானத்தில் காண்ப தற்கு அரிய கடவுளான அருந்ததியைப் போன்ற அவள் நின் மகனுக்குத் தாயாதல் தகுதியானதே என எண்ணி, அவள் வருந்தாதபடி முகமன் உரை கூறி அனுப்பி வைத்தேன் அல்லேனோ? இங்ஙனமாகவும், பரத்தையர் யாரையும் அறியேன் எனப் பொய் கூற வேண்டா?” என்று சேரி யிலிருந்து திரும்பிய தலைவனிடம் தலைவி சொன்னாள்.

185. ஊடல் நீங்கியது. கூன் முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற, மீன் முள் அன்ன, வெண்கால் மா மலர் பொய்தல் மகளிர் விழவு அணிக் கூட்டும் அவ் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனைப் புலத்தல் கூடுமோ - தோழி! - அல்கல் பெருங் கதவு.பொருத யானை மருப்பின் இரும்பு செய் தொடியின் ஏர ஆகி, ‘மாக் கண் அடைய மார்பகம் பொருந்தி முயங்கல் விடாஅல் இவை என மயங்கி, ‘யான் ஒம் என்னவும் ஒல்லார், தாம் மற்று இவை பாராட்டிய பருவமும் உளவே இனியே புதல்வற் தடுத்த பாலொடு தடைஇ, திதலை அணிந்த தேம் கொள் மென் முலை நறுஞ் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம் வீங்க முயங்கல் யாம் வேண்டினமே தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே, ஆயிடைக் கவவுக் கை நெகிழ்ந்தமை போற்றி, மதவு நடைச்