பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்97



அவன்கிட்ட காட்டு, ஏங்கிட்ட ஏன் வெறுப்ப காட்டுற' என்று சொல்றாள். என்ன துயரம், அந்த மனோநிலையை நினைச்சுப் பாருங்க. அப்படி வாங்கிட்டு வந்ததை அள்ளி விடுடீங்கிறானே, இவன எதில வைச்சு 'கம்பார்' பண்ண முடியும்? இந்தப் பாட்டுக்கு பதவுரை, பொழிப்புரை படிச்சுக் குட்டிச்சுவராப் போனோம். மூலத்த மட்டுமல்ல பாட்ட அனுபவிக்கணும். பதவுரை க..ரை, பொ..ரை என்று சொல்லி இலக்கண குறிப்புகள். அவ்வளவுதான், பாட்டு குரங்கு கையில மாட்டுன பூமாலையாப் போச்சு. தமிழ்க் கவிதை, அது இன்றைக்கு தொடருது.

123. ஆதரிஸ்டட்... இந்த ரோலன்பாத்-ஹனுடைய...

அந்த நம்மளவர்கள், ஆதரிஸ்டட் என்பதை என்னைக்கோ 20 வருஷத்துக்கு முன்னாடி எழுதியது. இது எங்களவன் கண்டுபிடிச்சு அந்த authorஐக் கொன்றே விட்டான். ஏனென்றால் ஆதரைத் தெரிந்தால் நூல்ல ஈடுபட மாட்டீங்க. மறைமலை அடிகள் கதைதான். நம்மாழ்வாரைப் படிக்கல. அவரைத் தெரிஞ்சு, அவரு வைஷ்ணவருனு ஆழ்வார்னு தெரிஞ்சதாலேதான் அதைப் படிக்கவில்லை. இந்த நம்மாழ்வர்-ங்கிற பெயரே தெரியாத மாதிரி இந்தப் பெயர் இருந்ததுன்னு வைத்துக் கொள்ளுங்கள். படிச்சுருப்பாரு. அந்த வெறுப்புணர்ச்சி எதுல வந்துச்சு? தெரிஞ்சதனால. கொல்லுடா, உனக்குத் திருவள்ளுவன்தான், அவன் பாப்பானுக்குப் பொறந்தா என்ன? பறையனுக்குப் பொறந்தா உனக்கு என்ன?

124. அதாவது, author யாருன்னு தெரியாம, அதுல இருக்குறதப் படிச்சு அதுல இருக்குறத உணரணும்.

அதுல authorஐப் பார்க்குறீங்க. இளங்கோவடிகள் சமயம் பற்றிச் சொன்னேன். என் புஸ்தகத்தைப் பாருங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/105&oldid=493523" இலிருந்து மீள்விக்கப்பட்டது