பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் & To

வதுவை நல் மணம் கழிந்த பின்றை, கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து, பேர் இற்கிழத்தி ஆக எனத் தமர் தர, ஒர் இற் கூடிய உடன் புணர் கங்குல், கொடும் புறம் வளைஇ கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள் கிடந்த ஒர் புறம் தழிஇ, முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப, அஞ்சினள் உயிர்த்தகாலை, யாழ நின் நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை என, இன் நகை இருக்கை, பின் யான் விளவலின், செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர, அகம் மலி உவகையன்ஆகி, முகன் இகுத்து, ஒய்யென இறைஞ்சியோளே - மாவின் மடம் கொள் மதைஇய நோக்கின், ஒடுங்கு ஈர் ஒதி, மாஅயோளே.

- நல்லாவூர் கிழார் அக 86 மிக்க இருளானது நீங்கிய அழகுடைய விடியற் காலை யில் தீய கோள்களின் தொடர்பு நீங்கப் பெற்ற வளைந்த வெண்மையான திங்களினைக் குற்றமில்லாத சிறந்த புகழை உடைய உரோகிணி என்ற நாளினை அடைந்தது. அப்போது நம் இல்லத்தில் உழுத்தப் பருப்பு இட்டுச் சமைத்த பொங்க லுடன் மிக்க சோற்றையும் உறவினரும் மற்றவரும் உண்ணு கையினால் ஏற்படும் ஆரவாரம் இடையறாது கேட்க, வரிசை யான கால்களையுடைய குளிர்ந்த பெரிய திருமணப் பந்தலில் புதியதாகக் கொண்டுவந்த மணலைப் பரப்பி வீட்டில் விளக்கை ஏற்றி வைத்து மாலைகளைத் தொங்க விட்டனர்.

தலையில் குடம் ஏந்தியவரும், புதிய அகன்ற வாயைக் கொண்ட மண் ஏனத்தை உடையவரும் ஆகிய மணத்தைச் செய்து வைக்கும் ஆரவாரம் உடைய மங்கல முதிய மகளிர் முன்னே தரவேண்டியவற்றையும் பின்னே தரவேண்டிய வற்றையும் முறை முறையாக எடுத்துத் தந்தனர்.

மகனைப் பெற்ற தேமலையுடைய அழகிய வயிற்றைப் பெற்ற தூய அணிகளையுடைய மகளிர் நால்வர் ஒன்று கூடி நின்று கற்பினின்றும் வழுவாது நல்ல பலவாகிய உதவி