பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


கொடி இயலார் கைபோல் குவிந்த முகை அரவு உடன்றவைபோல் விரிந்த குலை குடை விரிந்தவை.போலக் கோலும் மலர் சுனை கழிந்து தூங்குவன நீரின் மலர் சினை விரிந்து உதிர்ந்த வீப் புதல் விரி போதொடும் அருவி சொரிந்த திரையின் துரந்து நெடு மால் சுருங்கை நடு வழிப் போந்து கடு மா களிறு அனைத்துக் கை விடு நீர் போலும் நெடு நீர் மலி புனல், நீள் மாடக் கூடல் கடி மதில் பெய்யும் பொழுது; நாம் அமர் உடலும் நட்பும் தணப்பும் காமமும் கள்ளும் கலந்து உடன் பாராட்ட தாம் அமர் காதலரொடு ஆடப்புணர்வித்தல் பூ மலி வையைக்கு இயல்பு.

- நல்லந்துவனார் பரி பா 20 சூல் முதிர்ந்த முகில், மலை ஒழுங்கைச் சூழ்ந்து சூழ்ந்து சினம் கொள்ளும் இடியேற்றுக் கூட்டம் ஆரவாரிக்கும்படி கடல் வற்றிப்போக முகந்து கொண்டு வந்த நீரை அம் மலை யினது கற்கள் துண்டாகும்படி வீசிப் பெய்து, தன்னுடன் போரிட்டு மாறுபட்ட புலியைக் குத்திப் பிளந்த பொலி வுடைய நெற்றியை உடைய யானையின் கொம்பில் உள்ள குருதியால் மிக்க களங்கத்தை அக் கோடு தெளிவு பெறுமாறு கழுவியது.

வையை ஆறு கொண்டலானது காலையல் கடலில் படிந்து அது குறையுமாறு மொண்ட நீருடன், காயும் ஞாயிறு போன வழியே மேற்குத் திக்கிற்குப் போய், மாலை நேரத்தில் மலையை அடைந்து இம் மண்ணுலகத்தில் வாழும் உயிர் இனம் எல்லாம் உறங்கும் இரவுப் பொழுது எல்லாம் தான் உறங்காமல் வழங்கிய மழை பெய்தலால் அந் நீருடன் மரங்கள் தரும் மலரின் மணமும், மலர்கள் தரும் தேனின் மணமும், சினந்து சுடும் வெய்யிலையும் மிகுந்த காற்றையும் உடைய காடுகள் அளிக்கும் வெங்கார் மணமும், மரத்தின் கொம்புகள் உதிர்ந்த கனிகளின் மணமும் ஆகிய இம் மணங் 456536Tr ஒருசேரக் கலந்து கொண்டு வந்து பிறர்க்குத் தரும்.