பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


தலைவனே, உன்னைப் பற்றிக் கொண்டேன். ஆதலால் செல்லாதே.

கொடி கட்டப்பட்ட தேரையும் பொன் அணிகளையும் உடைய நன்னன் என்பவன் புனல் நாடு என்ற நாட்டில் வாழ்பவரைச் சினந்து எழுந்தான். யாழிசை உள்ள தெருக் களையுடைய பாழி என்ற நகரில் நின்று அஞ்சாதீர் என்று ‘ஆஅய் எயினன் உரைத்தான். அவ்வாறு தான் சொல்லிய சொல் பிழையாது போர் வெல்லும் பயிற்சியுடைய ‘மிளுதிலி’ என்பவனுடன் போரிட்டுத் தனது உயிரையும் தந்தான்.

ஆனால் நீயோ வெல்வதற்கு அரிய தெய்வத்தின் முன் தெளிவித்து மெல்லிய சந்தினை உடைய என் முன் கையைப் பற்றிச் சொன்ன சொல்லைக் கடந்து அன்புடைய உள்ளம் மேலும் மேலும் மகிழ்ந்து சிறக்க உன் மார்பைத் தராமல் அயலான் ஆனாய். இனி நான் உன்னை விடமாட்டேன்.

ஆதிமந்தி என்பாள் நீர்வடியும் கண்ணைக் கொண்ட வளாய்ப் பலவற்றையும் வெறுத்து இருக்க, கடிய ஆற்றல் வாய்ந்த ஆட்டன் அத்தி என்ற காதலன் ஆடும் அழகை விரும்பி, நீர்ப் பெருக்கையுடைய காவிரியாறு கவர்ந்து ஒளித்துக் கொண்டாற் போல் உன் மனைவி உன்னைப் பற்றிக் கொள்ளவும் நான் அஞ்சினேன்.

சினம் கொண்டு எழுந்து, ஆரிய அரசர்கள் அலறும்படி அவர்களைத் தாக்கிப் பெரும் புகழை உடைய இமய மலை யின் மீது வளைந்த விற் பொறியைப் பொறித்து, கடுஞ்சினம் உடைய பகை மன்னரைப் பிணித்து வந்த சேரனது வஞ்சி நகரை ஒத்த என் அழகைத் தந்துவிட்டுப் போவாயாக! என்று காதற் பரத்தை தலைவனிடம் சொன்னாள்.