பக்கம்:ஆண்டாள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

53


1. பழம் பெருமை வாய்ந்த இந்த நாட்டிலே தொன்று தொட்டு நிலைபெற்று வருகிற சமயங்கள் பலவற்றுள் திருமால் சமயமாகிய வைணவம் ஒன்று என்பதற்கு வேத வேதாங்களும் புராண இதிகாசங்களும் ஏற்ற சான்றுகளாய் இலக்குகின்றன.

2. 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்தில் வைணவம் மிகப் பழமையான ஒன்று என்பதற்குத் தொல்காப்பியம் சிறந்த துணைசெய்கின்றது. அதைக் கொண்டு இறை வழிபாடுகள் தொல்காப்பியனார் காலத்திற்கு மிகவும் முற்பட்ட காலத்திலே தமிழ் மக்களால் கைக்கொள்ளப்பட்டவை என்பது விளக்கமுறும்.'

8. வழிவழி வந்தவன் திருமால். இதைப் பத்துப் பாட்டும், எட்டுத்தொகையும் துலங்க வைக்கின்றன.

பத்துப்பாட்டில் பெரும்பாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக்காஞ்சி ஆகிய நூல்கள் மாயோனின் வரலாறு காட்டுகின்றன.

எட்டுத்தொகையில் நற்றிணை, பதிற்றுப்பத்து. பரிபாடல், கலித்தொகை, அகநானுாறு. புறநானூறு ஆகிய நூல்கள் திருமாலின் ஐவகை இருப்பு நிலைகளைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன. -

4. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் தலைசிறந்ததான முப்பாலுள் திருமாலுலகம் எடுத்தியம்பப் பெறுகின்றது. இவை போன்றே நான்மணிக்கடிகை, கார்நாற்பது, திடுகடுக்ம், ஆகியவற்றில் காயாம்பூ வண்ணனான திருவடிகள் பூமியை அளந்தது, பூங்குருந்தத்தைச் சாய்த்தது, மாயச்சகடம் உதைத்தது என்று திருவடிமேல் ஏற்றிப் புகழ்வதைக் காணலாம்.

5. நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் அஞ்சனவண்ணன் ஆடிய ஆட்டத்தைக் காட்டுகின்றது. திருமாலுக்குத் தனிக் கோயிலும் பலராமனுக்குத் தணிக்கோயிலும் இருந்ததைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/55&oldid=958870" இலிருந்து மீள்விக்கப்பட்டது