பக்கம்:ஆண்டாள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

161


பாடும் குயில்காள்! ஈதென்ன
பாடல், நல் வேங்கட
நாடர் நமக்கொரு வாழ்வுதந்
தால்வந்து பாடுமின்,
ஆடும் கருளக்கொடியுடை
யார்வர் தருள்செய்து,
கூடுவ ராயிடில் கூவிநும்
பாட்டுகள் கேட்டுமே91

அடுத்து மயில்களை விளித்துப் பேசத் தொடங்குகிறார். "கூட்டங்கூட்டமாய் நடமாடும் மயில்களே! நீங்கள் கண்ணபிரான் போன்று நடனஞ்செய்கின்றீர்கள். பாம்பணையில் பலகாலமும் பள்ளி கொண்டிருக்கின்ற மணவாளர் நம்மை வைத்திருக்கும் நிலைமையைக் காண்பீராக." "ஏ மயில்களே! உங்கள் நடமாட்டத்தை இனிக் காணும் பேறு எனக்கு வாய்க்காது. என் நெஞ்சங்கவர்ந்து என் உடையினையும் பிற செல்வங்களையும் கவர்ந்து கொண்ட கோவிந்தன் என்னளவில் செங்கோலோச்சும் நல்லிறைவன் எனப்படமாட்டாது."

"ஏ மழையே! வேங்கடத்துள் நல்ஊற்றெடுக்க மழையாய் பொழியும் மழையே! என் நெஞ்சில் வேங்கடத்தழகனார் சூடிக்கொண்டார் நான் அவரை அணைக்கும் வண்ணம் அவரோடு என்னை நெருக்குவித்து அதன்பின் பொழிய வல்லாயோ நீ"

"ஓ கடலே! தனக்குப் படுக்கையிடமாக வாய்ந்த உன்னை மந்தர மலையிட்டுக் கடைந்து கலக்கி; உள் உடலிலே புகுந்திருந்து சாரமான அமுதத்தைக் கொண்டவராய் என் உடலிலும் புகுந்திருந்து என் உயிரே அறுக்குமவருமான எம்பெருமானுக்கு விண்ணபிக்கும் போக்கில் என் துக்கங்களையெல்லாம் அவர் படுக்கையாக விளங்கும் அனந்தாழ்வானிடத்தில் நீ போய்ச் சொல்லுவாயா?"

இவ்வறெல்லாம் கார்க்கோடல் பூக்களையும், முல்லை மலர்களையும், குயில்களையும், மயில்களையும், மழையையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/163&oldid=1462164" இலிருந்து மீள்விக்கப்பட்டது