பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


ஆயின், ஆயிழாய் அன்னவை யான் ஆங்கு அறியாமை போற்றிய, நின் மெய் தொடுகு. ‘அன்னையோ மெய்யைப்பொய் என்று மயங்கிய, கைஒன்று அறிகல்லாப் போறிகாண், நீ.

நல்லாய் பொய் எல்லாம் ஏற்றி, தவறு தலைப்பெய்து, கையொடு கண்டாய், பிழைத்தேன், அருள், இனி.

அருளுகம் யாம்; யாரேம், எல்லா தெருள? அளித்து, நீ பண்ணிய பூழ் எல்லாம் - இன்னும் விளித்து நின் பாணனொடு ஆடி அளித்திவிடலை நீ நீத்தலின், நோய் பெரிது ஏய்க்கும்; நடலைபபட்டு, எல்லாம் நின் பூழ். - கலி 95 “தலைவ! நீ மணக்கும் கரிய கூந்தலை உடைய பரத்தை யரின் வீட்டுக்குச் செல்பவனாய், இடையில் இங்குப் போகும் வழி தவறி வந்தது போல் உள்ளாய் நீ இங்குப் பரந்து பார்க்காதே! அங்கே நில்! அங்கே நில். இனி உன் பரத்தை யர் மனையில் நின் சிவந்த அடியானது மிகச் சிவக்கும் படி வந்தது போலவே திரும்பிப்போ!’ என்று தலைவி தலை வனைப் பார்த்துச் சொன்னாள்.

அதைக் கேட்ட தலைவன், “செறிந்து விளங்கும் வெண்மையான பற்களை உடையவளே! நாம் புதிதாக வந்த காடைப் பறவைப் போரைக் கண்டோம். அதுவன்றி நீ தீங்காக எண்ணும் ஒழுக்கம் சிறிதும் நாம் அறிந்ததும் இல்லை” என்று சொன்னாள்.

அதைக் கேட்ட தலைவி, “நீ எந்த நாளும் குறும்பூழ்ப் பறவையின் போரைக் கண்டவிதத்தை நானும் கேட்டேன். அஃது இன்னவிதம் என நான் கூறக் கேள் ஒரு நாள் கொடுத்தாற் போலன்றிப் புதியவரின் கொடையின் பெருமை யைப் பாடி உன்னிடத்தினின்று நீங்காதவன் யாழ் வாசித்த லால் கவிழ்ந்த கையை உடையவன் பாணன். தன்னுடைய யாழ் ஒசையால் முன்பு தாழ்த்தப்பட்ட செவிகளை அவன் கூறுவதைக் கேட்பதற்கு அவர் சாய்க்கின்றனர். ஆதலால் இப் போது இக் கூற்றால் புதிதாய் அகப்பட்ட பூழின் புதிய போர்களைக் கண்டவன் போலவும் இருந்தாய். அதனை