பக்கம்:ஆண்டாள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

ஆண்டாள்


கடம். திருவரங்கம் ஆகிய மூன்று பதிகளையே பாடினார். என்பர், அவற்றுள் முதலாவதாகத் திருமாலிருஞ்சோலை உறை சுந்தரனைப் பாடிய திறத்தினை முன்னரே உணர்ந்தோம். "சிந்தூரச் செம்பொடி', எனத் தொடங்கும் ஒன்பதாம் பத்து, திருமரலிருஞ்சோலை எம்பெருமானை வழிபடும் போக்கில் அமைந்திருக்கக் காணலாம் மலைத் தலங்கள் என்றாலே ஆண்டு இயற்கை கவிநடம் புரிவது இயற்கை. முருகன் அல்லது அழகைக் குன்றுதோறும் ஆடிவரும் குமர வடிவேலனாகக் கண்டனர் பழந்தமிழர். அறுமுகவொருவனின் நிருவருளைப் பரவிப் பாடிய அருணகிரி யாரும் "பலகுன்றிலும் அமர்ந்த பெருமாளே' என்றே பாடிப் பரவினார். அம்முறையில் திருமாலிருஞ்சோலை காண்போர் கண்ணுக்குக் குளிர்ச்சியையும் அகமகிழ்வையும் ஒருங்கே தருவவாகும். சிந்தூரச் செம்பொடியினை எங்கும் பரவிப் பறக்கின்றன. முல்லைக்கொடிகள் பூத்துக் குலுங்கித் தம் வெண்மலரால் ஒளிநகை புரிகின்றன. கருவினை மலர்களும்; காயாம்பூக்களும் எங்கும் பார்த்து பரவக் காட்சி வழங்குகின்றன. -

ஆனால் வேங்கடத்தே வாழும் குயில்களும், மயில்களும் கருவினை மலர்களும், களங்கனிகளும், காயாம்பூக்களும் ஐம்பெரும் பாதகர்களாகின்றன. இறையோடு நம்மைச் சேர வொட்டாது தடுக்கும் ஐம்புலன்களைப் போல இவைபாதகஞ் செய்துறிற்கின்றன. திருமாலிருஞ்சோலை எம்பெருமானின் நிருமுகங்களுக்கு இவை ஈடாகுமா? என்கிறார் ஆண்டாள்.

பைம்பொழில் வாழ்குயில்காள்!
மயில்காள் ஒண் கருவிளைகாள்!
வம்பக் களங்கனிகாள்!
வண்ணப்பூவை நறுமலர்காள்,
ஐம்பெரும் பாதகர்காள்!
அணிமாலிருஞ் சோலைகின்ற,
எம்பெரு மானுடைய
நிறமுகங்களுக் கென்செய்வதே82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/158&oldid=1462159" இலிருந்து மீள்விக்கப்பட்டது