பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேத்தன் & 1&;

அம் மொட்டுகளிடையே புன்சிரிப்புடைய முகம்போல் பூத்த பல மலர்கள். இங்கனம் விளங்கும் தாமரையினிடையே பறவைகள் ஒலிக்கும் வயல். அவ் வயலில் உள்ள வேப்ப மரத் தின் அரும்பைப் போன்ற நீண்ட கண்ணையுடைய நீர் நண்டு பரத்தமை பொருட்டாகப் பிரிந்து சென்றது. இது இரையை எதிர்பார்த்திருந்த வெண் நாரையைக் கண்டு அஞ்சும். அஞ்சிப் பக்கத்தில் உள்ள பகன்றைக் கொடி படர்ந்த கரிய சேற்றுப் படிவில் தேமல் போல வரியுண்டாக ஒடிப் போய் மறையும். இத்தகைய இயல்பு வாய்ந்த ஊரை யுடைய தலைவனே!

வீட்டில் உள்ள மரத்தின் மீது படரும் வயலைக் கொடியை மலர்களையுடைய ஆம்பற் கொடியுடன் கட்டிய தழை ஆடையை உடுத்து விழாவில் கூத்தாடும் பரத்தை யருடன் தழுவி ஆடும் அணியில் நீயும் கூடிப் பொலிந்தனை. நீலமலர் போன்ற மையுண்ட கண்களையும் மாட்சிமை யுடைய அணிகலன்களையும் உற்ற நின் காதலியான பரத்தை யின் சிறிய வளையல் அணிந்த கையை தீ விட்டு விட்டனை அல்லையோ! அதற்கு அவள் உள் செய்கையைப் பொறுத்துக் கொள்ளாமல் அவள் உன்னைச் சினந்தாள் போலும்!

அங்ஙனம் சினந்த அப் பரத்தை தன் முகத்தினது அழகு கெட அழுது ஏக்கமுற்றுப் பொன்னை உருக்கி வார்த்தாற் போன்ற தேமலையும், பலமுறை முறித்துக் கொள்வதால் சிவந்த விரலையும், கடித்தலால் உரிய முனையைப் பெற்ற முனை மழுங்கிய பற்களையும் உடையவளாய், ஊர் முழுவதும் பழி தூற்றப்படும் நின்னைக் காண்பதற்குத் தேடிச் செல்வாள் ஆகையால், உன் காதலியான அப் பரத்தை எம்மைப் போல் புற்கென்ற உளைபோன்ற தலைமயிரை உடைய மகனைப் பெற்று நெல்லையுடைய பெரிய இல்லத்தில் நின்னைப் பிரிந்து தங்கியிருக்க என்ன கடமைப்பட்டவளோ? அவள் அத்தகைய கடமை உடையவள் அல்லளே, என்று தோழி தலைவன் வாயில் மறுத்துரைத்தாள்.

201. தலைவிக்கு நான் பகையல்லேன் வானம் வேண்டா வறன்இல் வாழ்க்கை நோன் ஞாண் விளைஞர் கோள் அறிந்து ஈர்க்கும்