பக்கம்:ஆண்டாள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

ஆண்டாள்


திருப்பாவை தெரிவிப்பனவற்றை ஒரு சேரத் தொகுத்துக் காண்போம்.


நோன்பு நோற்கும் முறை

"எல்லையில்லாப் பேரருள் நாம் எட்டிப் பிடிக்கும் அளவுக்குத் தன்னைத் தாழ்த்திக்கொண்டு இங்கே கண்ணனாக வந்தது. கோபியரின் பாக்யமே பாக்யம். பரமபதத்திலும் பெறமுடியாத இறைவன் கருணையை இங்கே இவர்கள் பெற்றார்கள், இதுவல்லவோ பெருவாழ்வு! ஆகவே. இவர்களே வையத்து வாழ்பவர்கள்" என்பர் பேராசிரியர் அ. சீநிவாச இராகவன் அவர்கள். (திருப்பாவை விளக்க உரை : ப. 3)

நோன்பை மேற்கொள்ளுவோர் இறைவனுக்கு இன்ப மூட்டுவனவற்றையே இயற்றுதல் வேண்டும். தமக்கு இன்ப மளிக்கும் நெய், பால் முதலியவற்றை உண்ணாமல், வைகறையில் எழுந்து நீராடிக் கண்களுக்கு மையிட்டுக்கொள்ளாமலும், கூந்தலுக்கு மலர் சூடிக் கொள்ளாமலும், செய்யத் தகாதனவற்றைச் செய்யாமலும் குறளை மொழி-அதாவது புறம் பேசாமலும் இருந்து, பிச்சையும் ஏழ்மையை எண்ணிக் கொடுக்கும் பொருளையும் முடிந்தவரையில் பிறகுக்கு வழங்கி உய்யும் வழியை மனத்தில் சிந்தித்து, மேற்படி கொடையால் விளைந்த மகிழ்ச்சியுடன் பாவை நோன்பில் ஈடுபடவேண்டும் என்று பாவை பாடிய பாவையார் பகர்கிறார்.

வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளிரோ: பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி
நெய்உண்ணோம் பால்உண்ணோம் நாட்காலை நீராடி
மையிட் டெழுதோம் மலரிட்டு காம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/120&oldid=1462122" இலிருந்து மீள்விக்கப்பட்டது