பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

195


உள்ளி உழையே ஒருங்கு படை விடக் கள்ளர் படர்தந்தது போல, தாம் எம்மை எள்ளுமார் வந்தாரே ஈங்கு.

ஏதப்பாடு எண்ணி, புரிசை வியல் உள்ளோர் கள்வரைக் காணாது,'கண்டேம் என்பார் போல, சேய் நின்று செய்யாத சொல்லிச் சினவல் நின் ஆணை கடக்கிற்பார் யார்? அதிர்வு இல் படிறு எருக்கி, வந்து என் மகன்மேல், முதிர் பூண் முலை பொருத ஏதிலாள் முச்சி உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப, எதிர் வளி நின்றாய், நீ செல். இனி, எல்லா யாம் திதிலேம்’ என்று தெளிப்பவும், கைந்நீவி யாதொன்றும் எம்கண் மறுத்தரவு இல்லாயின், மேதக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம், தாவா விருப்பொடு கன்று யாத்துழிச் செல்லும் ஆ போல் படர் தக, நாம். - கலி 81 குற்றம் இல்லாது விளங்கும் மணி போன்ற அழகு பொருந்திய வாய் தனது எழுத்து வடிவம் கொள்ளாத மழலைச்சொல் சொல்வதால் பிறந்த நீரால், விளங்கும் அணியை நனைக்கவும், நன்மை பொருந்திய தலையில் கிடந்த பொன்னால் செய்த பிறையுள் சேர்த்த முத்து மாலையுடன் நெற்றியில் தொங்கும் உருண்ட ‘சுட்டி விளக்கத்துடனே அசையவும், நிறத்தை ஒழியாமல் தோற்றுவிக்கும் உடுத்த லின்று கழன்ற அழகான ஆடை, தண்டை ஒலிக்கும் ஒலி மாறாத அடியைத் தடுக்கவும், பாலினால் விம்மிய முலையை மறந்து முற்றத்தில் உருளையுடைய தேரைக் கையால் செலுத்தி நடத்தலைக் கற்று ஆலின் கீழ் அமர்ந்த இறைவனின் மகன் முருகப் பெருமானைப் போல வரும் என் உயிரே!

பெருமையுடையவனே, பெருந்தகைமை பொருந்திய வனே, உன் மழலைச் சொல்லைக் கேட்டு இனிமை மாறா திருக்கும் மனத்துக்கு அமுதத்தை உண்டது போல் இன்னும் இனிதாக விருந்தினர் வருவதால் செயல் ஒழியாத எம்மையும் நினைக்காது தாயர் பெருந் தெருவில் உன்னைக் கொண்