பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

93


வெறுத்துக், கையில் தடியையுடைய வீரரைப் போல நடந்து, பக்கத்திலுள்ள குன்றுபோற் சேர்ந்த வெள்ளையான மணலில் துயிலும் ஊரனே, நீ இப்போது மிகவும் காதல் உள்ளவன் போல நெருங்குகிறாய். போர் எழப் பகைவர் களைத் தொலைத்தவனும் சிவந்த வேற்படை உடைய வனுமான வயவன் என்பவனுக்கு உரிமையானது நீர்வளம் மிக்க இருப்பையூர். அவ் ஊர் போன்ற என் தழைத்த பல் கூந்தல் அழகு பெறப் புனைந்த அரும்பு மலர்ந்த பூமாலை வாடும்படி செய்த பகைவன் நீ, யான் உன் செய்கையை மறந்து விடவில்லை. ஆதலால் என்னைத் தொடாதே” என்று பரத்தையிடமிருந்து வந்த தலைவனிடம் தலைவி ஊடிக் கூறினாள்.

170. விருந்தினரால் ஊடல் தவிர்த்தேன் கொக்கினுக்கு ஒழிந்த தீம்பழம், கொக்கின் கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பற் தூங்கு நீர்க் குட்டத்து, துடுமென வீழும் தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமை புலவாய் என்றி - தோழி, - புலவேன் - பழன யாமைப் பாசறைப்புறத்துக், கழனி காவலர் சுரி நந்து உடைக்கும், தொன்று முதிர் வேளிர், குன்றுர் அன்ன என் நல் மனை நனி விருந்து அயரும் கைதுவின்மையின் எய்தாமாறே. - பரணர் நற் 280 “கொக்கின் கூம்பிய நிலைபோன்ற அரும்புகளையுடைய ஆம்பல் மலர் நிறைந்திருக்கும் குளத்து ஆழமான நீரிலே மா மரத்திலிருந்து உதிர்ந்து ஒழிந்த இனிய மாம்பழம் “துடும்” என விழும். அவ்வாறான தண்ணிய துறையை யுடைய மருத நிலத் தலைவன் நீங்காத பரத்தைமை கண்டும் புலவாதே.” என்று என்னைப் பாத்துச் சொல்கிறாய். தோழியே, மிகப் பழைய வேளிர்களுடைய குன்றுார் என்பதில் வயல்களைக் காவல் செய்வோர். வயல் ஆமையின் பசிய இலைபோலக் காணப்படும் முதுகில் தாம் சுடுகின்ற நத்தையை உடைத்து உண்பர். அந்த ஊர் போன்ற எனது நல்ல மனையில் விருந்தி