பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


வடுக் காட்ட, கண் காணாதற்றாக, என் தோழி தொடி கொட்ப நீத்த கொடுமையைக் கடிது என உணராமை கடிந்ததோ, நினக்கே. - கலி 99 கள்ளை உண்ணுதல் கூடாது என்று நீக்கின தேவர்க்கும், அதனை உண்ணலை நீக்காத அசுரர்க்கும், நீக்குதலும் நீக்காமையுமாகிய அவ் இரண்டையும் கைக் கொண்டு அறத்தொழிலாகக் கொண்டு இன்பப்படுத்தும் வியாழன் வெள்ளி என்னும் குரு இருவர். அவர்கள் செய்த, வழி வேறு பட்ட தொழில்களை உடைய அரசியலைக் கூறும் நூல் வழியைத் தப்பாமல் மேற் கொண்டு ஆள்பவனே!

குழந்தையைப் பார்த்த இன்பம் கொள்ளும் தாய் அதற்கு முலை சுரந்து பால் கொடுக்குமாறு போன்று மழையானது தன்னை வேண்டிய காலத்தில் பெய்து உலகத்தைக் காக்கும் நல்ல முறையை எல்லார்க்கும் தப்பாது உண்டாதலை உன் நடுவு நிலைமையால் உலகத்துக்குத் தரும்படி பொருந்திய, கொடியுடைய தேரையும் மணிகட்டிய நல்இன யானையை யும் உடையவனே!

உன் அழகிய குடையின் நிழல் அறத்தைச் செய்யும் என்று எடுத்தனை. அந்த குடையினது நிழலின் புறத்தே இவள் அகப்பட்டாளோ, அதில் அகப்பட்டவள் அல்லள். இங்ஙனம் வளர்பிறை போலும் நெற்றி, பசலை கொள்ளப் பெரிய நடுக்கம் உள்ள இவளை இங்கு அருள் கொண்டு பார்!

நின் செங்கோலின் உயர்வான நடுவு நிலைமை தப்பாமையை உலகம் புகழ்ந்து கூறும் அந்தச் செங்கோலின் இனிய தொழிலுக்குக் கீழான கொடுந்தொழிலில் இவள் தள்ளப்பட்டாளோ! அங்ஙனம் அதில் தள்ளப்பட்டவள் அல்லள். இவ்வாறு காம நோய் இறப்பை உண்டாகுதலால், தான் உயிர் வாழும் நாளை வெறுத்த இவளை இங்கு அருள் கொண்டு பாராய்!

அடிக்கப்படுகின்ற உன் முரசம் இவ் உலகத்துக்குக் காவல் என்று கூறும்படியாய் ஒலிக்கும். அந்த முரசினது காவ லினின்று இவள் நீங்கினவளல்லள். இங்ஙனம் மூங்கில் தன் நலம் இழந்ததற்குக் காரணமான தோள் பழைய அழகு கெடும் படி வருந்துகின்ற இவளை இவ் இடத்தில் அருளிப் பார்!