பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

191


பூங் கண் புதல்வனைப் பொய் பல பாராட்டி, நீங்காய் இகவாய் நெடுங் கடை நில்லாதி, ஆங்கே அவர் வயின் சென்றி - அணி சிதைப்பான்ஈங்கு என் புதல்வனைத் தந்து. - கலி 79 பறவைகள் ஒலிக்கின்ற அகன்ற வயல் அதில் ஒலிக்கும் செந்நெல். அதனிடையே மலர்ந்த முட்களையுடைய தாமரை செந்நெல் முழு வடிவத்தையும் சாய்க்கையால் அதன் வள மான இதழைப் பொருந்தும்படி வளர்ந்து பூவில் கிடந்து விளங்கும் ஒரு கதிர் அஃது அவையில் உள்ளவர் புகழும் அரங்கத்தில் ஆடுபவளின் தலைக் கோலத்தினின்று நெற்றி யில் தாழும்படி ஒரு வடமாகச் செருகி வைக்கப்பட்ட ‘வயந்தகம்’ என்ற அணியைப் போல் தோன்றும். இத்தகைய அழகு மிக்க கழனியுடைய குளிர்ந்த துறையை உடையவனே!

நீ பரத்தையரிடத்து அணிந்த அணியுடன் இங்கு வந்து எம் மகனை எடுக்காதே! அவனது மணி போன்ற வாயின் நீர் உன் மார்பின் பரப்பை எல்லாம் நனைப்பதாய் உள்ளது அவ்வாறு அது நனைக்குமானால், யான் நின் மார்பில் சேர்ந்தவரை அறிவேன் என்று சொல்லி மணம் கமழும் நின் சந்தனத்தால் அயலார் தழுவலை மனத்தால் கருதுபவள் பரத்தை வருந்துவாள் அல்லளோ!

எம் மகனைத் தழுவாதே, பரத்தையர் கொண்டாடுதலை யுடைய உன் அகன்ற மார்பில் கிடக்கும் பல வடங்களை உடைய முத்து அணிந்த மாலையைக் கையால் பிடித்து அறுப்பவனாய் என் மகன் உள்ளான் அவன் அங்ஙனம் அறுத்தால் சிறந்த அணிகளையும் மடப்பத்தையும் உடைய மகளிர் முயங்கிய முயக்கத்தை உன் மார்பில் கிடக்கும் அணியால் எண்ணுதலை மனத்துக் கொண்டவள் வெறுப்புக் கொள்வாள் அல்லளோ?

எம் மகன் தானே நின்னிடம் வரக்கண்டும் அவனை எடுத்துக் கொள்ளாதே! உன் தலையில் வண்டுகள் ஒலிக்கின்ற கூறுபாட்டைக் கொண்ட பூங்கொத்தின் பூக்களை உதிர்ந்து அதனை அறுப்பவனாய் என் மகன் உள்ளான். அங்ஙனம் அவன் அறுத்தால் உன்னைத் தழுவியவர்களை அறிவிப்பது இம் மாலையாகும் என்ற சொல்லி மணம் கமழும் நின்