பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


கள்ளும் கண்ணியும் கையுறையாக - நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய் நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஒச்சித், தணி மருங்கு அறியாள், யாய் அழ, மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே?

- ஆவூர் மூலங்கிழார் அக 156 “பெருமானே! மூன்று வகையான முரசுகளை உடைய மன்னரின் குதிரைத் தலையின் மீது தைக்கின்ற கவரியைத் தொங்க விட்டாற் போன்று தொங்கும் கழனியில் விளைந்த சிவந்த அரியில் உள்ள நெற்கதிரைக் முதிய பசு தின்பதைக் கண்டு அஞ்சி, வயலைக் காப்பவர் அதற்குக் கரும்பை உண்பித்தனர். பின் பாகற் கொடியைப் பகன்றைக் கொடி யுடன் அறுத்து அவற்றால் காஞ்சி மரத்தில் ப்சுவைக் கட்டி வைப்பர். இவ் இயல்பு வாய்ந்த நீர்வளம் உடைய நாட்டை உடையவனே!

எம் தாய், நீர்த் துறையிடத்து நிலைபெற்ற முருகப் பெருமானுக்கு வழிபாட்டுப் பொருள்களாகக் கள்ளும், மலர் மாலையும் நேரே நிற்கும் கொம்பையுடைய வெள்ளாட்டுக் கிடாய் ஆகியவற்றை எல்லாம் செலுத்தினாள். அவ்வாறு செய்தும் எம் தலைவியின் நோய் தணிதற்கு மருந்தைக் காணாதவளாய் வருந்தி அழும்படியாய் எம் தலைவியின் நீலமணி போன்ற மேனி பொன்னிறமான பசலை பாய்ந்தது. இங்ஙனம் ஆவது -

குவளை மலர் போன்ற கண்களை யுடைய இவளும் யானும் வயலில், மலர்ந்த இதழ் ஒடியாத ஆம்பல் மலருடன் கூடிய பசிய தழையாகிய ஆடை எம் உடலில் கிடந்து வருந்துமாறு, ஞாயிறு தோன்றும் விடியற்காலத்தில் விளை யாடி மகிழ்வோம் என நினைத்துச் சோலையில் வந்தோம். அங்கு உன்னைக் கண்டு நின்னுடன் நகைத்து உரையாடிப் பிழை செய்தமையால் உண்டான தீமையே ஆகும்” என்று தலைவனிடம் தலைவியை மணம் புரியச் சொன்னாள் தோழி. 199. யார் என்னுடன் நீராடியவர்? ‘நல் மரம் குழிஇயநனை முதிர் சாடி

பல் நாள்.அரித்த கோஒய் உடைப்பின்,