பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

ஆள் சுவடிகளைப் பெயர்த்து எழுதும் போது இவ்வா றெல்லாம் வேறுபடுவதற்கு வாய்ப்பு உண்டு. இடைச் செருகலாகச் சில பாடல்கள் சிலரால் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் ஒரு கருத்து கூறப்படுகிறது. இருநூறுக்கும் மேற்பட்ட சுவடிகள் இருத்தலின், சுவடிக்குச் சுவடி குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவையெல்லாம், கம்ப ராமாயணம் ஒரு காலத்தில் நாடு முழுவதும் பரவலாகப் பயிலப்பட்டது என்னும் உண்மையை அறிவிக்கின்றன.

கம்பரும் வால்மீகியும்

வால்மீகி ராமாயணத்தின் வழி நூலே கம்ப ராமாயணம். எனினும், கம்பர் வால்மீகியினும் சிற்சில வேறுபாடுகள் கொண்டுள்ளார். அடிப்படையான பெரிய வேறுபாடு, வால்மீகி இராமனையும் சீதையையும் மக்களாகக் கொண்டிருக்க, கம்பரோ இருவரையும் திருமால்- திருமகள் ஆகியோரின் தெய்வப் பிறவிகளாகக் கொண்டு அதற்கு ஏற்பக் கதையை அமைத்துக்கொண்டு சென்றுள்ளமையாகும். இன்னொரு வேறுபாடு காண்பாம்: இராவணன் சீதையை உடலைப் பிடித்துத் தூக்கிக் கொண்டு போனதாக வால்மீகி அறிவித்திருக்க, கம்பரோ, சீதை இருந்த குடிலை அடியோடு அகழ்ந்து சீதையைத் தீண்டாமல் குடிலோடு தூக்கிக் கொண்டு சென்றதாகக் கூறியுள்ளார்.

கதையின் இடையிடையே இருவர்க்கும் சிறுசிறு மாறுபாடுகள் பற்பல உண்டு. அவர் சொன்னதை இவர் விட்டிருப்பார்- அவர் சொல்லாததை இவர் சொல்லி இருப்பார். புனைவுகளில் இருவரிடையே ஏற்றத்