பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் & 327

நறுந் தண் ததரமும் நானழுத் நாறும் நெறிந்த குரற் கூந்தற் நாள் அணிக்கு ஒப்ப, நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு மேல் நாள், நீ பூப் பலி விட்ட கடவுளைக் கண்டாயோ?

ஈர் அணிக்கு ஏற்ற ஒடியாப் படிவத்துச் சூர் கொண்ட செவ்வேலாற் பாடி, பல நாளும் ஆராக் கனை காமம் குன்றத்து நின்னோடு மாரி இறுத்த கடவுளைக் கண்டாயோ?

கண்ட கடவுளர் தம்முளும், நின்னை வெறி கொள் வியல் மார்பு வேறாகச் செய்து, குறி கொளச் செய்தார் யார்? செப்பு மற்று யாரும் சிறு வரைத் தங்கின் வெகுள்வர்; செறு தக்காய்! தேறினேன்; சென்றி நீ - செல்லா விடுவாயேல், நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய நெட்டிருங் கூந்தல் கடவுளர் எல்லார்க்கும் முட்டுப்பாடு ஆகலும் உண்டு. - கலி 93 “இனிய மென்மைமிக்க பரத்தமைக் குணத்தை உடைய, வண்டுகள் மொய்க்கும் சந்தனத்தைக் கை வடுக் கொள்ளும்படி பூசிய அகன்ற மார்பை உடையவனே, முன்னம் நீ இத்தகைய தன்மையை உடையவன் அல்லை! அத் தன்மை போய் விட்டது. இங்கு இரவுக் காலத்தில் வர, நீ வெளியில் போய்க் கண்டது எத்தன்மை உடையது? அதைச் சொல்வாய்!” என்று தலைவனைப் பார்த்து வினவினாள் தலைவி.

அதைக் கேட்ட தலைவன் “பெருத்த மென்மையான தோளை உடையவளே, நான் செய்வதைக் கேட்பாயாயின், கேள். நாம் இருவரும் போய்த் துறவறத்திருந்கும் வாழ்க்கைக்கு உதவியாய் இருக்கும் கடவுளரை முனிவரைக் கண்டு அவரிடத்தில் தங்கினேன்” என்றான்.

அதைச் செவிமடுத்த தலைவி, “கடவுள் தன்மை உண்மை எனக் கொண்டு நடத்துபவர், சோலையில், மலரைச் சூடிய பெண் மானைப் போன்ற பார்வை கொண்ட பரத்தையர் பலர் உள்ளனர். அவர்களுள் நீ கூறிவந்த கடவுள் எக் கடவுள்? அக் கடவுளைக் கூறுவாய்!” என்றாள்.