பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

103


வரைபோல் யானை, வாய்மொழி முடியன் வரை வேய் புரையும் நல் தோள் அளிய - தோழி, தொலையுந - பலவே.

- ஒளவையார் நற் 390 “தோழியே, பொய்கையில் வாளைமீன் வாள் போல் பிறழும். அப் பொய்கையிலுள்ள நீர்நாய் நாளும் இடை யறாத துயிலை ஏற்கும். அவ்வாறாய பொய்கைகள் உள்ள ஊர் கோயில் வெண்ணி. அதன் அரசன் கைவண்மை உடைய கிள்ளிவளவன். அவ் ஊரைச் சுற்றியுள்ள வயலில் வெள்ளையான ஆம்பல் மலர் நிரம்பியிருக்கும். அம் மலரின் அழகிய நெளிவையுடைய தழையுடைய மெல்லிதாய் அகன்ற அல்குலில் அழகுபெற அணிந்து கொண்டு நாமும் விழா வுக்குச் செல்ல வேண்டும். அப்போது புது வருவாயுடைய ஊரனாகிய நம் தலைவன் நம்மைக் கண்டால் நம் அழகில் ஈடுபட்டு ஏற்றுக் கொள்வான். அவ்வாறு ஏற்றுக்கொண்டால் மலை போன்ற யானைகளை உடையவனும் வாய்மொழி தவறாதவனுமான முடியன் என்பவனின் மலையிலுள்ள மூங்கில் போன்ற நல்ல தோள்கள் வாடி அழகு தொலை யும். அவை இரங்கத் தகுந்தன” என்று பரத்தையிடமிருந்து மீண்ட தலைவனை விரும்பியவளாய் தலைவி ஏவலர் கேட்கப் புகன்றாள்.

182. நீ இல்லை என்றால் நான் இல்லை வாழை மென் தோடு வார்புறுபு ஊக்கும் நெல் விளை கழனி நேர் கண் செறுவின், அரிவனர் இட்ட சூட்டு அயல், பெரிய இருஞ் சுவல் வாளை பிறழும் ஊர! நின்இன்று அமைகுவென் ஆயின், இவண் நின்று இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ? மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து அறம் கெடல் அறியாது ஆங்கு, சிறந்த கேண்மையொடு அணைஇ, நீயே கெடு அறியாய் என் நெஞ்சத்தானே.

- - ஆலங்குடி வங்கனார் நற்றி 400