பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


அதைக் கேட்ட தலைவன் அப்படியாயின், ஆயிழையே, நீ கூறும் அத்தகைய குறிகளை நான் அவ் இடங்களில் செய்தறியாமையை உன் நெஞ்சில் போற்றுதற்கு நின் உடலைத் தொட்டுச் சூள் உரைப்பேன் என்றான்.

அதைக் கேட்ட தலைவி, அம்மையோ!’ என்று இகழ்ந்து சொன்னாள்.

அதைக் கேட்ட தலைவன், “யான் கூறும் மெய்யைப். பொய் என்று மயங்கிய நீ உலக ஒழுக்கம் ஒன்றும் அறியாய் போல் உள்ளாய்!” என்றான்.

“நல்லவளே, நான் செய்த தவறுகளை என் தலையிலே இட்டு என் பொய்களை எல்லாம் தெளிவித்து என் களவைக் கையுடன் பிடத்துக் கொண்டாய். நானும் உனக்குத் தவறிழைத் தேன். இனி எனக்கு அருள்வாய்” என்றான்.

அதைக் கேட்ட அவள், “ஏடா, நீ கூறியபடியே அருள் வோம் யாம். அவ்வாறு அருள்வதற்கு யாம் உமக்கு யார்? விடலையே, நின் புள் எல்லாம் நின் முன்பு அளித்துப் பின் கை விடுதலால் நின் நடிப்பில் அகப்பட்டு நோயைப் பெரி தாய்ப் பொருந்தும். அவை வருந்தாதபடி நீ உனக்கு ஆகும் படி, பண்ணிய புள் எல்லாவற்றையும் இன்னும் உன் பாணனால் அழைத்து விட்டு அவற்றின் மனம் தெறியுமாறு அளித்து ஆடுவாயாக!” என்றாள் தலைவி.

253. காமக் குதிரை ‘ஏந்து எழில் மார்ப எதிர் அல்ல, நின் வாய்ச் சொல், பாய்ந்து ஆய்ந்த தானைப் பரிந்து ஆனா மைந்தினை, சாந்து அழி வேரை, சுவல் தாழ்ந்த கண்ணியை, யாங்குச் சென்று ஈங்கு வந்தித்தந்தாய்? கேள், இனி: ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய் குதிரை வழங்கி வருவல். அறிந்தேன் குதிரைதான்; பால் பிரியா ஐங் கூந்தற் பல் மயிர்க் கொய் சுவல், மேல் விரித்த யாத்த சிகழிகைச் செவ் உளை, நீல மணிக் கடிகை வல்லிகை, யாப்பின் கீழ் ஞால் இயல் மென் காதின் புல்லிகைச் சாமரை,