பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் &

ஒண்தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து கொண்டனை’ என்ப ஒர் குறுமகள் அதுவே - செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின், அம் கலுழ் மாமை, அஃதை தந்தை, அண்ணல் யானை அடுபோர்ச் சோழர் வெண்னெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை, இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய, ஒளிரு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை, களிறு கவர் கம்பலை போல, அலர் ஆகின்றது, பலர் வாய்ப் பட்டே

- மருதம் பாடிய இளங்கடுங்கோ அக 96 கள்ளை உண்ட கலயம் கழுவப்படுதலால் அந்த நீரை யுண்ட இறால் மீன், செருக்குக் கொண்டு நாண் அறுபட்ட வில் தெறிப்பதைப் போல் நெற்கூடுகளின் அடியில் துள்ளி விழும். அத்தகைய இடத்தையுடைய மருத நிலத்து நீர் நிலையில் கரையில் உள்ள பிரம்பின் அரத்தின் வாய்போன்ற முட்களைக் கொண்ட நீண்ட கொடி, அருவியாக வந்து விழும் நீரின் மீது படர்ந்த ஆம்பலின் இலையைச் சுற்று கிறது. அந்த இலையை வாடைக் காற்று விட்டு விட்டுப் புகுந்து அசைக்கின்றது. அத் தோற்றம் கொல்லனின் உலைக் களத்தில் ஊதும் விசைக் கயிற்றால் இழுக்கப்படும் துருத்தி யைப் போல் உயர்ந்து எழுந்து தாழுகின்றது. இத்தகைய வயல்களையும் தோட்டங்களையும் உடைய காஞ்சி மரங்கள் மிகுந்துள்ள ஊரையுடைய தலைவனே!

நீ ஒளி பொருந்திய வளையலை அணிந்த பரத்தையர் கூட்டத்துள் ஓர் இளைய மகளை விரும்பி மணந்து கொண்டாய் என்று ஊரவர் கூறுகின்றனர்.

ஆகவே அச் செய்தி சிவந்த பொன்னாலான சிலம்பை யும் நெருங்கிய தொடையையும் அழகு மிகும் மாமை நிறத்தையும் உடைய அஃதை என்பவளுக்குத் தந்தையான பெருமை யுடைய யானையையும், வெல்லும் போரையும் உடைய சோழன் வெண்ணெல் விளையும் இடங்களை யுடைய பருவூர்ப் பாண்டியரான இரு பெரு வேந்தர்களும் போரிட்டுக் களத்தே இறந்துபட, விளங்கும் வாளால்